இந்தியாவிற்கு மரண பயத்தை காட்டிய சிஹாந்தர் ரசா -போராடி வென்ற இந்தியா…!

இந்தியா மற்றும் ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையிலான 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரின் மூன்றாவது மற்றும் கடைசி போட்டியில் இந்திய அணி 13 ரன்கள் வித்தியாசத்தில் போராட்டத்துடனான வெற்றியை பதிவு செய்து  3-0 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது.

Toss வென்று முதலில் பேட் செய்ய முடிவு செய்த இந்திய அணி, 50 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 289 ரன்கள் எடுத்தது.

இந்திய அணியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஷுப்மன் கில் 97 பந்துகளில் 130 ரன்கள் குவித்து தனது முதல் சதத்தை பதிவு செய்தார்.இஷான் கிஷான் 50 ரன்களும், ஷிகர் தவான் 40 ரன்களும் எடுத்தனர்.

பந்துவீச்சில் பிராட் எவன்ஸ் 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

அதன்படி, 290 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய ஜிம்பாப்வே வீரர்களால் 49.3 ஓவர்கள் முடிவில் 276 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது.

ஜிம்பாப்வே இன்னிங்ஸில் அதிகபட்சமாக சிக்கந்தர் ராசா 95 பந்துகளில் 115 ரன்களும், சீன் வில்லியம்ஸ் 45 ரன்களும் எடுத்தனர். 8 வது விக்கெட்டில் சத இணைப்பாட்டத்தை புரிந்து இந்திய வீர்ர்களுக்கு மரண பயத்தை காண்பித்தனர்.

பந்துவீச்சில் அவேஷ் கான் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

தொடர் நாயகன் மற்றும் ஆட்ட நாயகன் விருதுகளை ஷூப்மான் கில் பெற்றுக்கொண்டார்.