இந்தியாவில் பிறந்து நியூஸிலாந்துக்காக கிரிக்கெட் ஆடிய 5 வீரர்கள்…!

இந்தியா ஒரு மிகப்பெரிய நாடு, ஒவ்வொருவரும் தங்கள் நாட்டை தேசிய கிரிக்கெட்டில் பிரதிநிதித்துவப்படுத்தும் வாய்ப்பைப் பெறவில்லை. இதனால் இந்திய வீரர்கள் அதிக வாய்ப்புகளைப் பெறுவதற்காக வெவ்வேறு நாடுகளுக்கு குடிபெயர்ந்து பிற நாடுகளை பிரதிநிதித்துவப்படுத்திய சந்தர்ப்பங்கள் உள்ளன. அப்படியான நாடுகளில் ஒன்று நியூசிலாந்து.

இந்தியாவில் பிறந்தவர்கள் அல்லது இந்திய வம்சாவளியைக் கொண்ட பல வீரர்கள் இளம் வயதிலேயே நியூசிலாந்திற்கு குடிபெயர்ந்து அங்கு கிரிக்கெட் விளையாடத் தொடங்கியுள்ளனர். நியூசிலாந்திற்காக கிரிக்கெட் விளையாடுவதற்கான சிறந்த வாய்ப்பு உள்ளது.

இப்படியான காரணத்தால் தமது நாடுகளை விட்டு குடிபெயர்ந்து , சர்வதேச கிரிக்கெட்டில் நியூசிலாந்துக்காக விளையாடிய ஐந்து இந்திய வம்சாவளி கிரிக்கெட் வீரர்களைப் பார்ப்போம்.

1. தீபக் பட்டேல்

 

ஆஃப் ஸ்பின்னராக இருந்த தீபக் பட்டேல் தனது கிரிக்கெட்டுக்காக ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு குடிபெயர்ந்தார். அவர் கென்யாவில் பிறந்தார், ஆனால் பின்னர் அவருக்கு 10 வயதாக இருந்தபோது இங்கிலாந்து சென்றார். அவர் நீண்ட காலமாக கவுண்டி கிரிக்கெட்டில் விளையாடினார், ஆனால் இங்கிலாந்து அணிக்கு தேர்வு செய்யப்படவில்லை, எனவே அவர் நியூசிலாந்து செல்ல முடிவு செய்தார்.

இந்திய வம்சாவளியைக் கொண்ட பட்டேல், நியூசிலாந்திற்கு குடிபெயர்ந்து அந்தநாட்டை பிரதிநிதித்துவப்படுத்தும் வாய்ப்பு கிடைத்தது. 1992 உலகக் கிண்ண போட்டிகளில் பங்கெடுத்தார். அவர் ஒரு நல்ல ஆஃப் ஸ்பின்னராக இருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

2. ஜீதன் பட்டேல்

 

இந்திய வம்சாவளியைச் சேர்ந்த மற்றொரு ஸ்பின்னர், ஆனால் நியூசிலாந்தின் வெலிங்டனில் பிறந்தவர். மூன்று வடிவங்களிலும் நியூசிலாந்தைப் பிரதிநிதித்துவப்படுத்திய ஆஃப்-ஸ்பின்னரின் பெற்றோர் இந்தியர்கள் , ஆனால் நியூசிலாந்தில் பிறந்தவர்.

படேல் 2005 இல் ஒருநாள் போட்டியில் அறிமுகமானார் மற்றும் 2006 இல் டெஸ்ட் அறிமுகமானார். அவர் நியூஸிலாந்துக்காக  24 டெஸ்ட், 44 ஒருநாள் மற்றும் 10 T20 போட்டிகளில் விளையாடினார்.

அவர் 2017 இல் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார், 2019 ஆம் ஆண்டில் இங்கிலாந்தின் சுழல் பந்துவீச்சு ஆலோசகராக நியமிக்கப்பட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

3. இஷ் சோதி

 

லெக் ஸ்பின்னராக இருக்கும் இஷ் சோதி, இந்தியாவில் லூதியானாவில் பிறந்தார். இந்த லெக் ஸ்பின்னர் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர், இளம் வயதிலேயே நியூசிலாந்து செல்ல முடிவு செய்தார். சோதி தனது முதல் டெஸ்டில் 19 வயதாக இருந்தபோது விளையாடினார். அவர் டெஸ்டில் சிறப்பாக செயல்படவில்லை, எனவே டெஸ்ட் தரப்பில் அவருக்கு இடம் கிடைக்கவில்லை.

அவர் White Ball வடிவங்களில் வெற்றிகரமான லெக் ஸ்பின்னராக இருக்கிறார், குறிப்பாக T20 வடிவத்தில் அவர் தனது நாட்டிற்காக 50 க்கும் மேற்பட்ட விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். 28 வயதான லெக் ஸ்பின்னர் இந்த ஆண்டு இறுதியில் இந்தியாவில் நடைபெறவிருக்கும் T20 உலகக் கிண்ணத்தில் விளையாடுவார் என்றும் எதிர்பார்க்கலாம்.

4. ரோனி ஹிரா

ரோனி ஹிரா, இந்திய வம்சாவளியைக் கொண்ட மற்றொரு நியூசிலாந்து சுழற்பந்து வீச்சாளர் ஆவார். இடது கை சுழற்பந்து வீச்சாளர் 2012 இல் தனது T20 ஐ அறிமுகமானார் மற்றும் பிளாக் கேப்ஸை குறுகிய வடிவத்தில் (Short Format ) மட்டுமே பிரதிநிதித்துவப்படுத்தியுள்ளார். அவர் 14 T20 போட்டிகளில் விளையாடியுள்ளார் அத்தோடு 9 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.

இந்திய வம்சாவளியைக் கொண்ட ரோனி ஹிரா, நியூசிலாந்தின் ஆக்லாந்தில் பிறந்து வளர்ந்தவர் என்பதும் முக்கியமானது.

5. ஜீத் ராவல்

டெஸ்ட் போட்டிகளில் நியூசிலாந்தை பிரதிநிதித்துவப்படுத்திய ஜீத் ராவல் இந்தியாவின் குஜராத்தில் பிறந்தார். சுவாரஸ்யமாக, இடது கை ஆரம்ப துடுப்பாட்ட வீரரான இவர், தனது ஆரம்ப நாட்களில் பார்த்திவ் படேலுடன் கிரிக்கெட் விளையாடியுள்ளார். ராவல் தனது 16 வயதில் நியூசிலாந்து சென்றார், அதன் பின்னர் அங்கு குடியேறினார்.

ஒரு இளைஞனாக, ராவல் குஜராத்தை U -15 மற்றும் U -17 மட்டங்களில் பிரதிநிதித்துவப்படுத்தினார். பார்த்திவ் படேல், ரவீந்திர ஜடேஜா, அஜின்கியா ரஹானே போன்ற வீரர்களுடன் அவர் டிரஸ்ஸிங் ரூமை பகிர்ந்துள்ளார்.

16 வயதில் ராவல் தனது குடும்பத்தினருடன் நியூசிலாந்து சென்றார், இந்த முடிவு ஒரு நல்ல முடிவாக மாறியது. அவர் இன்னும் சில இந்திய வீரர்களுடன் நல்ல நண்பர்களாக இருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

ராவல் ஒரு சிறந்த உள்ளூர் பருவத்தைக் கொண்டிருந்தார், இது அவருக்கு ஒரு டெஸ்ட் வாய்ப்பை பெற உதவியது, மேலும் அவர் 2016 இல் தனது 28 வயதில் டெஸ்ட் அறிமுகமானார். அவர் 24 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளார் மற்றும் 30.08 சராசரியில் 1143 ஓட்டங்களை எடுத்தார். ஆயினும் பின்னர் டாம் ப்ளண்டெலிடம் தனது இடத்தைப் இழந்தார் இப்போது டேவன் கொன்வேயும் போட்டிக்கு வந்திருக்கிறார் . ராவலுக்கு வயது 32, அவர் நியூசிலாந்து டெஸ்ட் அணியில் மீண்டும் வருவது கடினம் என்றே கருதப்படுகின்றது.