இந்தியாவுக்கு அழுத்தம் தந்தோம்.. எங்களால் வீழ்த்த முடியும்.. நியூசிலாந்து கேப்டன் சாட்னர்

இந்தியாவுக்கு அழுத்தம் தந்தோம்.. எங்களால் வீழ்த்த முடியும்.. நியூசிலாந்து கேப்டன் சாட்னர்

சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இறுதிப்போட்டிக்கு இந்திய அணியுடன் நியூசிலாந்து அணி வரும் ஞாயிற்றுக்கிழமை பலப் பரீட்சை நடத்துகிறது. அரையிறுதி போட்டியில் தென்னாப்பிரிக்கா அணியை 50 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்து வீழ்த்தி பைனலுக்கு சென்றுள்ளது.

இது குறித்து கருத்து தெரிவித்துள்ள நியூசிலாந்து அணி கேப்டன் சாட்னர், “இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றிருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது. இந்த தொடர் முழுவதும் நாங்கள் நல்ல அணிகளால் கடும் சவால்களை எதிர்கொண்டோம். நாங்கள் இந்தியாவுக்கு எதிராக ஏற்கனவே விளையாடி நல்ல அனுபவத்தை பெற்றிருக்கிறோம்.”

“மீண்டும் அவர்களை சந்திப்பதை எதிர்பார்த்து காத்திருக்கின்றேன். ரச்சின் ரவீந்திரா எங்களுக்கு நல்ல அடித்தளத்தை அமைத்துக் கொடுத்தார்கள். இதேபோன்று இறுதிக்கட்டத்தில் எங்களுடைய வீரர்கள் பெரிய சாட் ஆடி நல்ல இலக்கை பெற்றுக் கொடுத்திருக்கிறார்கள். இதேபோன்று எங்களுடைய பவுலர்களும் முக்கிய கட்டத்தில் விக்கெட்டுகளை எடுத்திருக்கிறார்கள்.”

“தனிப்பட்ட முறையில் நானும் சிறப்பாக பந்து வீசி விக்கெட்டுகளை வீழ்த்தி இருக்கிறேன்.அதுவும் எனக்கு மகிழ்ச்சியை தருகின்றது. ஒரே அணியாக இணைந்து எதிரணியின் மீது நெருக்கடி செலுத்த வேண்டும் என்பதுதான் எங்களுடைய திட்டமாக இருந்தது. எங்கள் அணியில் நான்கு சுழற் பந்துவீச்சாளர்கள் இருக்கிறார்கள்.”

“இதன் மூலம் எங்கள் அணிக்கு நல்ல பலன் கிடைத்திருக்கிறது. பிலிப்ஸ், ரவீந்திரா ஆகியோர் ஓவர்களை வீசுகிறார்கள். இதேபோன்று வேகப்பந்துவீச்சாளர் ஹென்றிக்கு காயம் ஏற்பட்டிருக்கிறது. எனினும் அவர் சரியாகிவிடுவார் என நம்புகிறேன். வில்லியம்சன் எங்கள் அணியின் நட்சத்திர வீரர்.அவர் தொடர்ந்து எங்களுக்காக முக்கிய போட்டிகளில் ரன்கள் சேர்ப்பார்.”

“அவர்களுடைய பார்ட்னர்ஷிப் எங்கள் அணிக்கு மிகவும் பலமாக அமைந்தது. தற்போது 320 ரன்கள் எடுத்திருந்தால் கூட நாங்கள் இன்றைய ஆட்டத்தில் தோற்று இருப்போம். துபாயில் நாங்கள் ஏற்கனவே விளையாடியிருக்கிறோம். அந்த ஆட்டத்தில் இந்தியாவுக்கு எதிராக நாங்கள் கடும் நெருக்கடியை கொடுத்தோம். இதன் மூலம் அவர்களை வீழ்த்த முடியும் என்ற நம்பிக்கை எங்களுக்கு இருக்கின்றது. அங்கு என்ன சரி வரும் , சரிபடாது என்பதை பார்த்து பயிற்சி மேற்கொள்ள வேண்டும். இறுதி போட்டியில் நான் டாஸ் வெல்ல கூடாது என்று நினைக்கிறேன்” என்று சாட்னர் கூறியுள்ளார்.

Previous articleஹென்றி விளையாட வாய்ப்பில்லை 🇳🇿😳
Next articleஎன்னடா வயசாகுது உனக்கு.. வெறும் 13 இன்னிங்ஸில் சாதித்த ரச்சின் ரவீந்திரா.. 5வது சதம் விளாசி சம்பவம்!