இந்தியாவுக்கு எச்சரிக்கை விடுத்துள்ள ஜிம்பாப்வே வீரர்…!

இந்தியாவுக்கு எச்சரிக்கை விடுத்துள்ள ஜிம்பாப்வே…!

ஜிம்பாப்வேயின் தேசிய கிரிக்கெட் அணியை பிரதிநிதித்துவப்படுத்தும் இளம் வீரர் இன்னசென்ட் கையா, இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா உலகின் நம்பர் ஒன் பந்துவீச்சாளர் என்று கூறியுள்ளதுடன் அவர் இந்திய அணியில் இடம்பெறாதது தமக்கு சாதகமானது எனவும் தெரிவித்துள்ளார்.

வங்கதேசத்துக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் அபார சதம் அடித்து அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் செல்ல முடிந்தமையையும் அவர் பெருமையுடன் நினைவுபடுத்தியுள்ளார்.

பங்களாதேஷ் அணியுடனான ஒருநாள் தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதன் காரணமாக இன்னசென்ட் கையா இந்த நாட்களில் அதிக கவனத்தை ஈர்த்து வருகிறார்.

இந்தநிலையில் இந்திய அணிக்கும் ஜிம்பாப்வே அணிக்கும் இடையிலான ஒரு நாள் தொடர் ஆகஸ்ட் 18, 20 மற்றும் 22 ஆகிய தேதிகளில் ஹராரே மைதானத்தில் நடைபெறவுள்ளது.

ஜிம்பாப்வே சுற்றுப்பயணத்திற்கான இந்திய அணியில் ஜஸ்பிரித் பும்ரா இல்லாதது ஜிம்பாப்வே அணிக்கு சாதகமாக உள்ளது என்று கயா கூறியுள்ளார்.
“ஜஸ்பிரித் பும்ரா இல்லாதது எங்களுக்கு எப்போதும் பெரிய நன்மை. அவர் உலகின் நம்பர் ஒன் பந்துவீச்சாளர். எனவே, நிச்சயமாக, அவரை எதிர்கொள்ளாதது எங்களுக்கு ஒரு நன்மை.”

மேலும், காயம் காரணமாக வரும் ஆசிய கோப்பைக்கான இந்திய அணியில் இருந்து ஜஸ்பிரித் பும்ரா நீக்கப்பட்டுள்ளார். கடந்த காலத்தில் ஜிம்பாப்வே அணியின் செயல்பாடு குறித்து கேட்டபோது, ​​கயா பின்வரும் கருத்துக்களை தெரிவித்தார்.

“உண்மையில் என்ன மாறிவிட்டது? இது ஒரு மனநிலை. டேவிட் ஹூட்டன் தலைமைப் பயிற்சியாளராக வந்தபோது, ​​​​அவர் எப்பொழுதும் எங்களிடம் நேர்மறையான கிரிக்கெட்டை விளையாடுங்கள், ஷாட்களை எடுக்க பயப்பட வேண்டாம் என்று கூறினார். எமது கிரிக்கெட்டின் அணுகுமுறையில் மாற்றம் ஏற்பட்டது என அவர் தெரிவித்தார்.

எதுஎவ்வாறாயினும் இந்திய அணியுடனான போட்டிகளில் நிச்சயமாக நாம் அவர்களுக்கு அழுத்தம் கொடுப்போம் எனவும் தெரிவித்த அவர், தன்னுடைய ஆதர்ச நாயகன் லோகேஷ் ராகுல் எனவும் தெரிவித்தார்.

ஜிம்பாப்வே சுற்றுப்பயணத்தில் இந்திய அணியின் தலைவராக ராகுல் செயற்படுகின்றமையும் குறிப்பிடத்தக்கது.