இந்தியாவுக்கு எதிரான டுவென்டி 20 தொடரில் ஹசரங்க பங்கேற்பாரா ? மேலும் இரண்டு புதிய வீரர்கள் அணிக்கு திடீரென அழைக்கப்பட்டனர் ..!

இந்தியாவுக்கு எதிரான டுவென்டி 20 தொடரில் ஹசரங்க பங்கேற்பாரா ? மேலும் இரண்டு புதிய வீரர்கள் அணிக்கு திடீரென அழைக்கப்பட்டனர் ..!

இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கிடையிலான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் நிறைவுக்கு வந்துள்ளது.

நாளை 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர் ஆரம்பமாகிறது, இந்த நிலையில் இலங்கை அணியின் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளர் ஹசரங்க உபாதை காரணமாக மூன்றாவதும் இறுதியுமான ஒருநாள் போட்டியில் விளையாடியிருக்கவில்லை.

 

இந்த நிலையில் அவரால் டுவென்டி டுவென்டி தொடரில் பங்கேற்க முடியுமா என்று சந்தேகம் எழுந்திருக்கிறது.

இந்த நிலையில் ஹசரங்க T20 போட்டியில் பங்கேற்பதற்கான வாய்ப்பு இருப்பதாக நம்பிக்கை வெளியிட்டுள்ளார், இதனையும் விடவும் இரண்டு புதிய இளம் வீரர்கள் அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர் .

உதித் மதுஷான், சுமிந்த லக்‌ஷான் ஆகிய இளம் வீரர்கள் இலங்கையின் T20 குழாமில் இணைத்து கொள்ளப்பட்டிருப்பதாகவும் பிந்திய செய்திகள் குறிப்பிடுகின்றன.