இந்தியாவுடனான அதிரடி குறித்து கருத்து வெளியிட்ட நவாஸ் , தோல்வி்க்கு என்ன காரணம் ரோகித் தெரிவித்த கருத்துக்கள்…!

ஆசிய கோப்பையில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் இந்திய அணியை வீழ்த்தி பாகிஸ்தான் வெற்றி பெற்றது. இந்தப் போட்டியில் 182 ரன்கள் இலக்கை துரத்திய பாகிஸ்தான் அணிக்கு முகமது நவாஸ் அதிவேக இன்னிங்ஸ் விளையாடினார்.

முகமது நவாஸ் களம் இறங்கும் போது பாகிஸ்தான் அணி 2 விக்கெட் இழப்புக்கு 63 ரன்கள் எடுத்திருந்த நிலையில் வெற்றிக்கு 68 பந்துகளில் 119 ரன்கள் தேவைப்பட்டது.

முகமது நவாஸ் 20 பந்துகளில் 42 ரன்கள் எடுத்து ஆட்டத்தை பாகிஸ்தான் பக்கம் திருப்பினார்.

இந்த இன்னிங்ஸ் தொடர்பில் அவர் தெரிவித்த கரைத்துக்கள் ?

“நான் பேட்டிங் செய்ய வெளியே சென்றபோது, ​​எனக்கு ஒரு ஓவருக்கு 10 ரன்கள் தேவைப்பட்டது. அது கிடைத்தவுடன் நான் அடிக்க வேண்டும் என்று எனக்குத் தெரியும். என் Zone ல் விழும் ஒவ்வொரு பந்தையும் என்னால் அடிக்க முடியும் என்று என் மனதில் தெளிவாக இருந்தேன். மேலும் ஷாட்களை முயற்சித்தேன்.

இந்த போட்டியில் தோல்வி அடைந்தது குறித்து இந்திய கேப்டன் ரோகித் சர்மா கருத்து தெரிவித்துள்ளார்.

“இது எங்கள் மீது மிகுந்த அழுத்தத்தை ஏற்படுத்திய போட்டி. முகமது நவாஸ் மற்றும் ரிஸ்வானுடன் பாட்னர்ஷிப் ஏற்படுத்தியபோதும் நாங்கள் மிகவும் calm ஆக இருந்தோம். விஷயங்கள் விரைவாக மாறலாம், ஆனால் அந்த  சற்று நீளமானது. அவர்கள் அற்புதமாக பேட்டிங் செய்தனர். இதுபோன்ற போட்டிகள் எங்களுக்கு நிறைய கற்றுக்கொள்ள உதவும்’ என தெரிவித்தார்.

எது எவ்வாறாயினும் நேற்றைய போட்டியில் இந்திய அணி பாகிஸ்தானிடம் தோல்வியை தழுவியுள்ள நிலையில், அடுத்து வர உள்ள இலங்கை மற்றும் ஆப்கானிஸ்தான் அணியுடனான போட்டியில் இந்தியா கட்டாயம் வெற்றியைப் பெறவேண்டிய நெருக்கடியும் ஏற்பட்டுள்ளது .

அப்படியாக இருந்தால் மட்டுமே வருகின்ற ஞாயிற்றுக்கிழமை இறுதிப்போட்டிக்கு இந்தியாவால் முன்னேற முடியும் எனும் நிலைமை உருவாகியுள்ளது.