இந்தியாவுடனான தோல்வி- காரணத்தை தெளிவுபடுத்திய தென் ஆபிரிக்க அணித்தலைவர்..!

இந்திய அணியுடனான தோல்விக்கு பேட்ஸ்மேன்களின் பொறுப்பற்ற ஆட்டமே காரணம் என தென் ஆப்ரிக்கா டெஸ்ட் அணியின் கேப்டனான டீன் எல்கர் தெரிவித்துள்ளார்.

இந்த தொடரின் முதல் போட்டி தென் ஆப்ரிக்காவின் செஞ்சூரியன் மைதானத்தில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார்.

தென் ஆப்ரிக்கா சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி, தென் ஆப்ரிக்கா அணியுடன் மூன்று டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றுள்ளது.

இதன்பின் முதல் இன்னிங்ஸை துவங்கிய தென் ஆப்ரிக்கா அணி வீரர்கள் இந்திய அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டை பறிகொடுத்து வெளியேறியதால் 197 ரன்களுக்கே தென் ஆப்ரிக்கா அணி ஆல் அவுட்டானது.

இந்திய அணியில் அதிகபட்சமாக முகமது ஷமி 5 விக்கெட்டுகளையும், பும்ராஹ் மற்றும் ஷர்துல் தாகூர் தலா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

இதனையடுத்து 129 ரன்கள் முன்னிலையுடன் இரண்டாவது இன்னிங்ஸை துவங்கிய இந்திய அணி வீரர்கள், தென் ஆப்ரிக்கா அணியின் வேகப்பந்து வீச்சாளர்களை சமாளிக்க முடியாமல் விரைவாக விக்கெட்டை பறிகொடுத்து வெளியேறியதால் 50.3 ஓவரில் வெறும் 174 ரன்கள் மட்டுமே எடுத்த இந்திய அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இந்திய அணியில் அதிகபட்சமாக ரிஷப் பண்ட் 34 ரன்களும், கே.எல் ராகுல் 23 ரன்களும் எடுத்தனர்.

இதன்பிறகு 305 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை துரத்தி களமிறங்கியுள்ள தென் ஆப்ரிக்கா அணிக்கு, அந்த அணியின் கேப்டனான டீன் எல்கர் 77 ரன்களும், இறுதி வரை ஆட்டமிழக்காமல் போராடிய டெம்பா பவுமா 35 ரன்களும் எடுத்து கொடுத்தாலும் மற்ற வீரர்கள் அனைவரும் இந்திய அணியின் வேகப்பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டை இழந்து வெளியேறியதால் 191 ரன்களுக்கே ஆல் அவுட்டான தென் ஆப்ரிக்கா அணி 113 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

இந்தநிலையில், இந்திய அணியுடனான இந்த தோல்வி குறித்து பேசிய தென் ஆப்ரிக்கா அணியின் கேப்டனான டீன் எல்கர், பேட்ஸ்மேன்களின் பொறுப்பற்ற ஆட்டமே தோல்விக்கு காரணம் என தெரிவித்துள்ளார்.

இது குறித்து டீன் எல்கர் பேசுகையில், “இந்த மைதானத்தில் நாங்கள் அதிகமான டெஸ்ட் போட்டிகளில் விளையாடியது இல்லை, இதுவும் எங்களுக்கு பின்னடைவை கொடுத்துவிட்டது. அதே போல் இந்த போட்டியில் நாங்கள் சில தவறுகள் செய்திருந்தாலும் எஞ்சியுள்ள இரண்டு போட்டிகளில் இந்த தவறுகளை திருத்தி கொள்வோம் என நம்புகிறேன்.

ஆடுகளத்தின் தன்மை மிக கடினமாக இருந்தது. வெற்றிக்கு தேவையான சில அடிப்படை விசயங்களை இந்திய அணியின் துவக்க வீரர்கள் சிறப்பாக செய்து கொடுத்தனர், ஆனால் எங்கள் பேட்ஸ்மேன்கள் அதை சரியாக செய்யவில்லை. பந்துவிச்சாளர்கள் தங்களால் முடிந்த வரை சிறப்பாகவே செயல்பட்டனர், இருந்த போதிலும் பேட்ஸ்மேன்கள் தங்களது பங்களிப்பை சரியாக செய்யாதது எங்களின் இந்த தோல்விக்கு காரணமாக அமைந்துவிட்டது. அடுத்தடுத்த போட்டிகளில் தவறுகளை சரி செய்து கொண்டு சிறப்பாக விளையாடுவோம்” என்று தெரிவித்தார்.

#Abdh