இந்தியாவுடனான வெற்றியை புதுவிதமாக கொண்டாட புதிய திட்டம் வகுக்கும் பாபர் அசாம்- பாராட்டப்பட வேண்டியதுதான்..!

இந்தியாவுடனான வெற்றியை புதுவிதமாக கொண்டாட புதிய திட்டம் வகுக்கும் பாபர் அசாம்- பாராட்டப்பட வேண்டியதுதான்..!

பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம் உன்னதமான செயலில் ஈடுபட்டுள்ளார். 27 வயதான பேட்டிங் சூப்பர் ஸ்டார், 250 மாணவர்களுக்கு கல்வி கற்பதற்கான உதவி மூலம் இந்தியாவுக்கு எதிரான பாகிஸ்தானின் வெற்றியைக் கொண்டாட விரும்புவதாக முடிவு செய்துள்ளார்.

இந்த முயற்சியை தனது தந்தையும் முன்மாதிரியுமான முஹம்மது ஆசாம் மற்றும் சாயா கார்ப்பரேஷனுக்கு அர்ப்பணிப்பதாகவும் அசாம் மேலும் கூறினார். இந்த முயற்சிக்கு 2 மில்லியன் பாகிஸ்தான் ரூபாய் நிதி ஒதுக்கப்படும் என்றும் ஆசம் அறிவித்தார்.

“முன்னணி கல்விக்கான எட்-டெக் தளமான நூன் மூலம் தகுதியான 250 மாணவர்களுக்கு கல்வி கற்பிப்பதற்கான உதவி மூலம் நான் இந்த வெற்றியை கொண்டாட விரும்புகிறேன். இது எனது தந்தை மற்றும் முன்மாதிரியான முஹம்மது ஆசாம் மற்றும் சாயா கார்ப்பரேஷனுக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது” என்று பாபர் ஆசாம் தனது டுவீட்டில் குறிப்பிட்டுள்ளார்.

டி20 கிரிக்கெட்டில் பாகிஸ்தான் அணிக்காக விளையாடிய சிறந்த பேட்ஸ்மேன்களில் பாபர் ஆசாம் ஒருவர். வலது கை பேட்டிங் வீரரான இவர் தற்போது T20 வடிவத்தில் ‘Men in Green’ அணிக்காக அதிக ரன் எடுத்த மூன்றாவது வீரர் ஆவார், மேலும் 57 T20 இன்னிங்ஸ்களில் 48.34 என்ற சிறந்த சராசரியில் 2272 ரன்கள் குவித்துள்ளார்.

27 வயதான அவர் 35 டெஸ்ட் மற்றும் 83 ஒருநாள் போட்டிகளிலும் பாகிஸ்தானை பிரதிநிதித்துவப்படுத்தியுள்ளார். உலக கிண்ண வரலாற்றில் இந்தியாவை உலக கிண்ணத்தில் தோற்கடித்த முதல் தலைவர் எனும் பெருமையும் கடந்த ஞாயிற்றுக்கிழமை பாபர் ஆசாம் வசமானது.

இந்திய, பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான உலக கிண்ண போட்டியில் பாகிஸ்தான் அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றியைப் பெற்றமையும் குறிப்பிடத்தக்கது.