இந்தியாவை இந்தியாவிலேயே வைத்து வீழ்த்துவோம்.. வெறும் 3 நாட்களில்.. இலங்கை ஜாம்பவான் பேச்சு

இந்தியாவை இந்தியாவிலேயே வைத்து வீழ்த்துவோம்.. வெறும் 3 நாட்களில்.. இலங்கை ஜாம்பவான் பேச்சு

இந்திய டெஸ்ட் அணியின் சமீபத்திய மோசமான செயல்பாடுகள் குறித்து இலங்கையின் முன்னாள் கேப்டன் அர்ஜுனா ரணதுங்காவிடம் கேட்டபோது, அவர் அதிரடியான பதிலளித்து அனைவரையும் திகைக்க வைத்தார். 1996 ஒருநாள் போட்டி உலகக் கோப்பை வென்ற இலங்கை அணி, ரோஹித் சர்மா தலைமையிலான தற்போதைய இந்திய டெஸ்ட் அணியை மூன்று நாட்களில் வீழ்த்திவிடும் என்றும், அதுவும் இந்திய மண்ணிலேயே வைத்து வீழ்த்துவோம் என்று அவர் கூறியுள்ளார். இது இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் வேகமாகப் பரவி வருகிறது.

1996 ஒருநாள் போட்டி உலகக் கோப்பை இந்தியா மற்றும் பாகிஸ்தானில் நடைபெற்றது. அப்போது யாரும் எதிர்பாராத வகையில் இலங்கை அணி உலகக் கோப்பையை வென்றது. அந்த அணியில் சமிந்தா வாஸ், முத்தையா முரளிதரன், அரவிந்தா டி சில்வா, சனத் ஜெயசூர்யா, மாரவன் அட்டப்பட்டு, அர்ஜுனா ரணதுங்கா ஆகியோர் இடம்பெற்றிருந்தனர்.

இது பற்றி அர்ஜுனா ரணதுங்கா கூறுகையில், “சமிந்தா வாஸ் மற்றும் முத்தையா முரளிதரன் போன்ற பவுலர்கள் இருக்கும் நிலையில், எனது அணி இந்தியாவை இந்தியாவிலேயே மூன்று நாட்களில் வீழ்த்திவிடும்” என்றார்.

இந்திய கிரிக்கெட் அணி சமீபத்தில் இந்திய மண்ணில் நியூசிலாந்து அணியிடம் மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் மூன்றிலும் தோல்வி அடைந்தது. வரலாற்றிலேயே முதன் முறையாக நியூசிலாந்து அணி இந்திய மண்ணில் டெஸ்ட் தொடரை வென்றிருந்தது.

மேலும், இந்திய அணி இந்திய மண்ணில் தொடர்ந்து 18 டெஸ்ட் தொடர்களைக் கைப்பற்றி வெற்றி பெற்றிருந்த அந்த சாதனையும் முடிவுக்கு வந்தது. அதைத் தொடர்ந்து இந்திய அணி ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு அங்கு ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 1 – 4 என்ற கணக்கில் தோல்வி அடைந்தது.

Previous articleமகாஜனா அணி சாம்பியனானது..!
Next articleஇந்துக்களின் சமர் 3 ஆவது முறையாகவும் யாழ். இந்து வசம் !