இந்தியாவை எதிர்க்கொள்ளவுள்ள இலங்கை டெஸ்ட் அணியில் ஏற்படவுள்ள மாற்றங்கள், வெளிவரும் தகவல்கள்..!

இந்தியாவை எதிர்க்கொள்ளவுள்ள இலங்கை டெஸ்ட் அணியில் ஏற்படவுள்ள மாற்றங்கள், வெளிவரும் தகவல்கள்..!

இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கு இடையிலான 2வது டெஸ்ட் போட்டிக்கான தேர்வில் இருந்து இலங்கை வேகப்பந்து வீச்சாளர் துஷ்மந்த சமீர நீக்கப்பட்டுள்ளார்.

கணுக்கால் காயம் காரணமாக சமீரவின் பணிச்சுமையை நிர்வகிப்பது குறித்து இலங்கை கிரிக்கெட் (SLC) மருத்துவக் குழுவின் ஆலோசனையின் பேரில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

துஷ்மந்த சமீர, இந்த ஆண்டின் பிற்பகுதியில் T20 உலகக் கோப்பை வரை வெள்ளை பந்து (ODI,T20) கிரிக்கெட்டில் மட்டுமே விளையாடுவார்.

இந்தியாவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டிக்குப் பிறகு சுரங்கா லக்மல் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற உள்ளதால், சமீரவை டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து நீக்கியது இலங்கைக்கு மிகப்பெரிய இழப்பாகும்.

இதேநேரம் இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கிடையிலான 2 வது டெஸ்ட்டில் பத்தும் நிஸ்ஸங்க , லஹிரு குமார , சமீரா ஆகியோர் விளையாடமாட்டார்கள் என்பது இப்போதைய நிலையில் உறுதியாகியுள்ளது.