இந்தியாவை சந்திக்கப்போகும் இங்கிலாந்தின் 17 பேர் கொண்ட அணி விபரம் வெளியானது..!

இந்தியாவை சந்திக்கப்போகும் இங்கிலாந்தின் 17 பேர் கொண்ட அணி விபரம் வெளியானது..!

 இந்திய மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் வருகின்ற ஆகஸ்ட் மாதம் 4ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது.

ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இரண்டாவது அத்தியாயத்தின் முதலாவது தொடராக பார்க்கப்படும் இந்திய ,இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான தொடர் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்புகளை தோற்றுவித்துள்ளது.

இப்போதைய நிலையில் முதலிரு டெஸ்ட் போட்டிகளுக்கு இங்கிலாந்து அணி தங்களுடைய 17 பேர் கொண்ட அணி விபரத்தை அறிவித்துள்ளது.

இந்த அணியில் பாலியல் ரீதியான சமூக வலைத்தள கருத்துக்களை பகிர்ந்து குற்றத்திற்காக தடையையும் சர்ச்சைக்கும் ஆளான வேகப்பந்து வீச்சாளர் ரோபின்சன் அணியில் இடம்பெற்றுள்ளார்.

இது மாத்திரமல்லாமல் ஆரம்பத்துடுப்பாட்ட வீரர் ஹாஷிிப் ஹமீட் நீண்ட காலத்திற்குப் பின்னர் மீண்டும் அணிக்கு அழைக்கப்பட்டுள்ளார்.

வேகப்பந்து வீச்சாளர் ஜோப்ரா ஆச்சர் , சகலதுறை வீரர் கிறிஸ் வோக்ஸ் ஆகியோர் இந்த அணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர், உபாதை காரணமாக இவர்கள் இருவரும் இடம்பெறவில்லை என்று இங்கிலாந்துக் கிரிக்கெட் சபை அறிவித்தது.

இது மாத்திரமல்லாமல் நியூசிலாந்து தொடரில் சேர்க்கப்படாமல் இருந்த சாம் கர்ரன் ,பட்லர் ,பெயார்ஸ்டோ ஆகியோர் அணிக்கு அழைக்கப்பட்டுள்ளனர்.

அதேபோன்று பென் ஸ்டோக்ஸ் உம் இடையில் இடம் பெற்றுள்ளார்.