இந்தியாவை சந்திக்கவுள்ள இங்கிலாந்து டெஸ்ட் அணி அறிவிப்பு ..!
இங்கிலாந்து கிரிக்கெட் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கும் இந்திய அணிக்கும் இங்கிலாந்து அணிக்கும் இடையிலான டெஸ்ட் போட்டியில் விளையாடுவதற்காக இங்கிலாந்து குழாம் பெயரிடப்பட்டுள்ளது.
இந்த அணியில் விக்கெட் காப்பாளர் சம் பில்லிங்ஸ் இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளார்.
ஐசிசி டெஸ்ட் சம்பியன்ஷிப் வெற்றியாளர்களான நியூசிலாந்து அணியை 3-0 என்ற அடிப்படையில் வெற்றி கொண்டிருக்கும் இங்கிலாந்து, அடுத்து இந்தியாவை சந்திக்கப் போகிறது.
கடந்த ஆண்டு இடம்பெற்ற போட்டியில் கொரோனா பாதிப்பு காரணமாக 5 வதும் இறுதியுமான டெஸ்ட் போட்டி ஒத்தி வைக்கப்பட்டு இப்போது அந்த போட்டி இடம்பெறவுள்ளது.
ஒத்திவைக்கப்பட்ட இந்தியாவுடனான டெஸ்ட் போட்டிக்கான இங்கிலாந்து அணி விவரம் அறிவிக்கப்பட்டுள்ளது.
புதிய தலைமை பயிற்சியாளரான மெக்கல்லம், புதிய தலைவராக ஸ்டோக்ஸ் வழிநடத்தலில் இங்கிலாந்து ஒரு புதிய மாற்றம் கண்ட அணியாக எழுந்திருக்கிறது.
இறுதியாக விளையாடிய 17 டெஸ்ட் போட்டிகளில் ஒரே ஒரு போட்டியை மட்டுமே வெற்றி கொண்டிருந்த இங்கிலாந்து, இப்போது நியூசிலாந்துடன் விளையாடிய மூன்று ஆட்டங்களில் மூன்றிலும் இமாலய வெற்றி பெற்றுள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.