இந்திய, இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் தொடர் ஆரம்பம்

இந்திய இங்கிலாந்து அணிகள் மோதும் நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதலாவது போட்டி சென்னை சேப்பாக்கம் சிதம்பரம் மைதானத்தில் ஆரம்பித்துள்ளது .

போட்டியின் நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி தலைவர் ஜோ ரூட் முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்துள்ளார்.

இந்திய அணி சார்பில் மூன்று சுழற்பந்து வீச்சாளர்கள் விளையாடுகின்றனர். அஸ்வின், வாஷிங்டன் சுந்தர், சபாஸ் நதீம் ஆகியோரும் இஷாந்த் சர்மா , பூம்ரா ஆகியோர் வேகப்பந்து வீச்சாளர்களாகவும் விளையாடுகின்றனர்.

இங்கிலாந்து அணித்தலைவர் ரூட்டுக்கு 100வது டெஸ்ட் போட்டியாக அமைந்துள்ளது.

இங்கிலாந்துக்கு எதிரான ஆடும் இந்திய அணியில் ரோஹித் சர்மா, சுப்மான் கில், புஜாரா, கோலி, ரஹானே, பண்ட், வாஷிங்க்டன் சுந்தர், அஸ்வின், இஷாந்த் சர்மா, பும்ரா, சபாஷ் நதீம் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

*26 ஆண்டுகளுக்குப் பின்னர் இந்தியாவின் 2 நடுவர்கள் டெஸ்ட் போட்டியொன்றில் நடுவர்களாக கடமையாற்றுகின்றனர்

*17 டெஸ்ட் போட்டிகளுக்கு பின்னர் பூம்ரா இந்திய மண்ணில் முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடுகின்றார்

* அவுஸ்ரேலிய மண்ணில் சாதித்த மொகமட் சிராஐ் இன்றைய போட்டியில் விளையாடவில்லை

*அக்சார் பட்டேல் இறுதிநேர உபாதை காரணமாக அணியில் இல்லை ஆயினும் குல்தீப் யாதவ்க்கு வாய்ப்பு கொடுக்காமல் சபாஸ் ந்தீம் அணியில் இடம்பெற்றுள்ளார்