இந்தியா இங்கிலாந்து ஒரு நாள் தொடர் இன்று ஆரம்பம்
இங்கிலாந்து அணி இந்தியாவிற்கு சுற்று பயணம் மேற்கொண்டு முழுமையான தொடரில் விளையாடி வருகின்றது. 4 Test 5 T20 மற்றும் 3 ஒரு நாள் போட்டிகள் கொண்ட இத் தொடரின் ஒரு நாள் போட்டிகள் இன்று புனே மைதானத்தில் ஆரம்பமாக உள்ளது.
முன்னதாக Test தொடரை 3-1 என்ற கணக்கிலும் T20 தொடரை 3-2 என்ற கணக்கிலும் இந்திய அணி வெற்றி கொண்டிருந்தது.
ஒரு நாள் தொடரின் 3 போட்டிகளும் புனே மைதானத்தில் இடம்பெற உள்ளமை குறிப்பிடத்தக்கது.
தொடரின் முதல் போட்டியில் வெற்றி பெற்று தொடரை வெற்றியுடன் ஆரம்பிக்க இரு அணிகளும் முனைப்பாக உள்ளன. முன்னதாக இடம்பெற்ற Test மற்றும் T20 போட்டிகளில் முதல் போட்டியை இங்கிலாந்து வெற்றி பெற்றிருந்தாலும் தொடரை இந்திய அணி கைப்பற்றி இருந்ததது.
அணி விபரம்:
இந்திய அணியில் மீண்டும் நடராஜன்- ஒருநாள் அணி விபரம் அறிவிப்பு.