இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான போட்டி ஆரம்பம்-7 மாற்றங்கள்
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான முதலாவது டெஸ்ட் போட்டியின் ஆரம்பித்துள்ளது .
சென்னை சேப்பாக்கம் சிதம்பரம் மைதானத்தில் ஆரம்பித்திருக்கும் இந்த போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இந்திய அணியின் தலைவர் கோஅலி முதலில் துடுப்பெடுத்தாட விருப்பம் வெளியிட்டுள்ளார்.
முதலாவது போட்டியில் 227 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவிய இந்திய அணி இந்த போட்டிகள் பாரிய மாற்றங்களை கண்டுள்ளது.
அணியில் மூன்று மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
நதீம், வாஷிங்டன் சுந்தர் ,பூம்ரா ஆகியோருக்கு பதிலாக அக்சர் படேல், குல்தீப் யாதவ் ,சிராஜ் ஆகியோர் இடம்பிடித்துள்ளனர்.
இங்கிலாந்து அணியைப் பொறுத்தவரையில் விக்கெட் காப்பாளர் பென் போக்ஸ் , சுழற்பந்துவீச்சாளர் மொயின் அலி, ப்ரோட், ஒல்லி ஸ்டோன் ஆகியோர் இடம் பிடித்துள்ளனர்.