இந்தியா, மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையிலான போட்டி அட்டவணை …!

இந்தியா, மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையிலான போட்டி அட்டவணை …!

இந்தியாவிற்கான கிரிக்கெட் சுற்றுலாவை மேற்கொள்ளும் மேற்கிந்தியத் தீவுகள் கிரிக்கெட் அணி இந்தியாவில் 3 ஒருநாள் போட்டிகளிலும், 3 டுவென்டி டுவென்டி போட்டிகளிலும் விளையாடவுள்ளது.

தென் ஆப்பிரிக்கா கிரிக்கெட் சுற்றுலாவை மேற்கொண்டிருக்கும் இந்திய அணி, தென்னாபிரிக்காவுடனான ஒருநாள் தொடரை நிறைவுக்குக் கொண்டு வந்ததற்கு பின்னர் மேற்கிந்திய தீவுகள் உடனான தொடரில் விளையாட உள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.

இந்த போட்டிகளைப் பொறுத்தவரை பிப்ரவரி மாதம் 6ஆம் திகதி ஆரம்பமாகும் ஒருநாள் போட்டிகள் 6,9,11 ஆகிய திகதிகளில் அஹமதாபாத்தில் 3 ஒருநாள் ஆட்டங்கள் இடம்பெறவுள்ளன.

அதன் பின்னர் T20 போட்டிகள் 16,18,20 ஆகிய தேதிகளில் கொல்கத்தாவில் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.