இந்தியா வெற்றி; தொடர் சமநிலை

இந்தியா வெற்றி; தொடர் சமநிலை

இந்திய இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி சென்னையில் போட்டியின் 4 ஆம் நாளான இன்று முடிவுற்றது.

போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி ரோஹித் சர்மா வின் சதத்தின் உதவியுடன் 329 ஒட்டங்களை பெற்றது. பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அஷ்வின் சுழலில் சிக்கி தனது முதல் இன்னிங்ஸில் வெறுமனே 134 ஒட்டங்களை பெற்று ஆட்டமிழந்தது. 195 ஒட்டங்களுடன் தனது இரண்டாவது இன்னிங்ஸை ஆரம்பித்த இந்தியா அஷ்வின் மற்றும் கோஹ்லியின் சிறப்பான துடுப்பாட்டத்தால் 286 ஒட்டங்களை பெற்று ஆட்டமிழந்தது.
பதிலுக்கு 482 என்ற ஓட்ட இலக்குடன் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து 164 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்களையும் இழந்து 317 ஓட்டங்களால் தோல்வி அடைந்தது.