இந்தியா எதிர் பாக்கிஸ்தான்
சில போட்டிகளை ரசிகர்கள் ஆர்வத்துடன் எதிர்பார்ப்பனர். அதிலும் முக்கியமாக காற்பந்து போட்டிக்கு ஈடாக இந்தியா பாக்கிஸ்தான் போட்டி எதிர் பார்க்கப்படும். அந்த இரண்டு அணிகளும் மோதிக்கொள்ளும் போட்டிகள் அரிதிலும் அரிது. இரு நாடுகளுக்குமிடையிலுள்ள அரசியல் பிளவுகளே காரணமாகும். ஐசிசி யின் சுற்றுப் போட்டிகளில் மாத்திரமே இரு அணிகளும் மோதிக்கொள்ளும்.கடைசியாக 2013 ஆம் ஆண்டு இந்தியா பாக்கிஸ்தான் தொடர் நடைபெற்றது. அதன் பின் உலககிண்ணம், ஆசிய கிண்ணம், சம்பியன்ஸ் கிண்ணம் ஆகிய தொடர்களிலே மோதிக்கொள்ளும் அந்த போட்டி நாள் அன்று உத்வேகத்துடனும் நாட்டுப்பற்றோடும் தங்களை வெளிப்படுத்திக் கொள்வர் இரு அணியும்.
2007 ஆம் ஆண்டு உலக கிண்ண ஆரம்பம் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு சிறந்த பெறுபேறுகளை பெறக்கூடிய வகையிலே காணப்பட்டது. அந்த வருட லீக் போட்டிகளில் இந்தியா பாக்கிஸ்தான் போட்டி ரசிகர்களால் மறக்க முடியாத போட்டியாகும் காரணம் அதில் இடம்பெற்ற சுவாரஸ்யமான சூப்பர் ஓவர் போட்டி.விக்கெட்டுகளை போல்ட் முறையில் வீழ்த்தினால் 1 புள்ளி கணக்கில் எந்த அணி அதிக விக்கெட்டுகளை வீழ்த்துகிறதோ அந்த அணியே வெற்றி பெறும் என்பதே விதி.. இந்தியா அணி அதிக விக்கெட்டுகளை வீழ்த்தி போட்டியில் வெற்றீயீட்டியது. அந்த போட்டியில் இந்தியா சார்பாக உத்தப்பா, தோனி மற்றும் இர்பான் பதான் ஆகியோர் சிறப்பாக ஆடியிருந்தனர். பாக்கிஸ்தான் சார்பாக மிஸ்பா மற்றும் ஆசிப் சிறப்பாக செயற்பட்டனர் அதிலும் ஆசிப்பின் பந்து வீச்சுகள் இந்திய துடுப்பாட்ட வீரர்களை திணறடிக்க வைத்தது. இருந்தும் இந்திய அணியே வெற்றியீட்டியது.
மீண்டும் 2007 T20 உலக கிண்ண இறுதிப் போட்டியில் பலம் வாய்ந்த இந்தியா பாக்கிஸ்தான் அணிகள் பலப்பரீட்சை நடாத்தின.இந்த தொடர் முடிவுக்கு வந்த பின்னரே தோனி எனும் வரலாறு உச்சம் பெற ஆரம்பித்தது. காரணம் அனுபவமில்லாத இளம் வீரர்களை உபயோகித்து கிண்ணம் வென்றமை. அந்த இறுதிப் போட்டி கடைசி வரை எடுத்துச் செல்லப்பட்டிருந்தது. முதலில் துடுப்பெடுத்தாடிய இந்தியா அணி 152/5 ஐ 20 வர்களில் பெற்றது. துடுப்பாட்டத்தில் இந்தியா அணி சார்பாக கம்பிர் அபாரமாக ஆடினார். மைதானத்தின் எல்லா திசைகளிலும் பந்து சென்றது. பாகிஸ்தான் சார்பாக பந்து வீச்சில் உமர் குல் அற்புதமாக பந்து வீசினார். பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணி ஒரு கட்டத்தில் இலகுவாக வெற்றி பெற்று கிண்ணம் வெல்லும் என்று அனைவரும் நினைத்திருந்தனர் காரணம் ஆரம்ப துடுப்பாட்ட வீரர் இம்ரான் நசீரின் அதிரடி ஆட்டம் இந்தியாவை கதிகலங்க வைத்தது. மிஸ்பா களத்தில் இருக்கும் போது கூட பாக்கிஸ்தான் வெற்றி பெறும் என்றே பாக்கிஸ்தான் ரசிகர்களின் எதிர்பார்ப்பாக இருந்தது. ஆர் பி சிங், இர்பான் பதான் மற்றும் ஜோஹிந்தர் சர்மாவின் கட்டுப்பாடான பந்து வீச்சால் கட்டுப்படுத்தியது. யாரும் எதிர்பாராத வேளை ஜோஹிந்தர் சர்மா இறுதி ஓவர் வீச அழைக்கப்ட்டார்.தோனி தன் மேல் வைத்த நம்பிக்கையை உறுதி செய்தார். நேர்த்தியான பந்து வீச்சின் மூலம் இந்தியா முதல் T20 உலக கிண்ணம் தோனி தலைமையில் கைப்பற்றியது.
2009 சம்பியன் ஆனா பாகிஸ்தான் அந்த வருடமும் அடுத்த வருடம் இடம்பெற்ற (2010) உலக கிண்ணப்போட்டியிலும் இந்தியாவை எதிர்த்தாடவில்லை. மீண்டும் 2012 இல் இலங்கையில் இடம்பெற்ற T20 உலகக் கிண்ணப் போட்டியிலே சந்தித்தது.. சுப்பர் 8 போட்டியில் மோதின. முதலில் துடுப்பெடுத்தாதடிய பாக்கிஸ்தான் அணி 128 ஓட்டங்களுக்கு சகல விக்கட்டுகளையும் இழந்தது. ஆரம்பத்தில் அடுத்தத்தெடுத்து விக்கெட்டுகள் வீழ்த்தப்பட்டாலும் மலிக் மற்றும் உமர் அக்மலின் இணைப்பாட்டம் பாக்கிஸதானுக்கு சராசரியான ஓட்டங்கள் பெற உதவின. இந்தியா சார்பில் பந்து வீச்சில் பாலாஜி, அஷ்வின் மற்றும் யுவராஜ் சிங்கின் அபாரமான பந்து வீச்சில் சுருண்டது பாக்கிஸ்தான். பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இந்தியா பாகிஸ்தானை இலகுவாக எதிர் கொண்டது. விராட் அப்போது வளர்ந்து வீரராக தன்னை வெளிப்படுத்திக் கொண்டவர். பாகிஸ்தானுடனும் விளாசி பாக்கிஸ்தானை தோற்கடித்தனர் பந்து வீச்சில் சயீத் அஜ்மல் மாத்திரமே இந்தியாவிற்கு அழுத்தம் கொடுத்தார். மற்ற எவரின் பந்து வீச்சுகளும் எடுபடவில்லை.
மீண்டும் 2014 இல் டாக்காவில் இரு அணிகளும் மோதிக்கொண்டன.
முதலில் பாக்கிஸ்தான் அணி துடுப்பெடுத்தாடி 130 ஓட்ட்ங்களுக்கு 7 விக்கெட்டுகளை இழந்தது. பாக்கிஸ்தான் அணி சார்பாக உமர் அக்மல் மற்றும் ஷோயிப் மக்ஸூட் அணியின் ஓட்டங்களில் பெரும் பங்கு வகித்தனர். குறைவாக காணப்பட்ட ஓட்ட எண்ணிக்கையை மக்ஸூத் அதிரடி ஆட்டத்தால் சராசரி ஓட்டமாக மாற்றினார். இந்தியா சார்பாக பந்து வீச்சில் சுழல் பந்து வீச்சாளர்கள் ஆதிக்கம் செலுத்தினர். அஸ்வின், ஜடேஜா மற்றும் மிஸ்ரா ஆகியோரே மாயாஜாலம் நிகழ்வித்தனர். அந்த ஆண்டிலிருந்தே அஸ்வின் ஜடேஜா ஜோடி சிறப்பு பெற்றது. பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இந்தியா 18.3 ஓவர்களில் போட்டியை வெற்றியீட்டியது. இந்தியா அணி சார்பாக துடுப்பாட்டத்தில் ரெய்னா, கோலி, தவான் மற்றும் ரோஹித் நிதானமாக வெற்றியிலக்கை அடைந்தனர். 2014 உலகக் கிண்ணம் முழுவதும் விராட் கோலி தனது துடுப்பாட்டம் மூலம் சகல அணிகளையும் அச்சுறுத்தினார். அந்த ஆண்டில் இருந்தே ‘Run Machine’ என்றும் அழைக்கப்பட்டார்
2016 இல் ஈடன் கார்டனில் சந்தித்த இந்திய பாக்கிஸ்தான் அணிகள் பலப்பரீட்சை நாடாத்தின. இந்த போட்டி பலத்த பாதுகாப்பிற்கு மத்தியில் இடம்பெற்றது. ஆரம்பத்தில் இப்போட்டி தர்மசாலாவிலே நடைபெற இருந்தது. பாக்கிஸ்தான் அணியின் அச்சம் காரணமாக கொல்கத்தாவிற்கு மாற்றப்பட்டது.இந்தப் போட்டி மிகவும் எதிர்பார்க்கப்பட்டது.ஏனெனில் அமீரின் மீள் வருகை பாகிஸ்தானுக்கு கூடுதல் பலமாக இருந்தது. மீண்டும் அந்த போட்டியிலும் பாக்கிஸ்தான் அணி தோல்வியையே தழுவியது. இந்தப் போட்டியில் மழை இடைக்கிடையில் குறுக்கெடுத்ததால் 18 ஓவர்களாக குறைக்கப்பட்டது. முதலில் துடுப்பெடுத்தாடிய பாக்கிஸ்தான் அணி 18 ஓவர்களில் 118 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்தது. ஆரம்பத்தில் ஷர்ஜீல் ஷஹ்ஸாத் கூட்டணி சிறப்பாக துவக்கி வைத்தாலும் அடுத்தெடுத்த விக்கெட்டுகளை இழந்தது பாக்கிஸ்தான் மீண்டும் உமர் அக்மல் மலிக் ஜோடியே ஓட்டங்களை உயர்த்த உதவினர். இந்தியா சார்பாக பந்து வீச்சில் அஸ்வின், நெஹ்ரா மற்றும் பும்ரா ஆகியோர் பாகிஸ்தானை கட்டுக்குள் கொண்டு வந்தனர். அந்த போட்டியில் பும்ரா தன்னை தரம் வாய்ந்த பந்து வீச்சாளராக வெளிப்படுத்தினார். பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இந்தியா ஆரம்பத்தில் தடுமாற்றத்தை வெளிப்படுத்தியது. அமீர் 2 பக்கமும் ஸ்விங் செய்து இந்தியாவை திக்கு முக்காட வைத்தார் அமீர் கொடுத்த அழுத்தம் அடுத்து வீசிய சமிக்கு விக்கெட்டுகள் பெற இலகுவாக இருந்தது. மைதானத்தில் நுழைந்த கோலி போட்டியின் போக்கையே மாற்றினார். தனது நிதானமான துடுப்பாட்டம் மூலம் இந்தியாவை வரலாற்று வெற்றிக்கு கொண்டு சென்றார்.
இதுவரையில் இந்தியா பாக்கிஸ்தான் போட்டிகளில்.
கடைசியாக இடம்பெற்ற T20 உலக கிண்ண 5 போட்டிகளில்
இந்தியா 5
பாக்கிஸ்தான் 0
இந்த ஆண்டு 7 வது T20 உலக கிண்ணம் ஐக்கிய அமீரகம் மற்றும் ஓமனில் இந்தியா நடாத்துகிறது மீண்டும் ஒக்டோபர் 24(இன்று ) மீண்டும் இந்தியா பாகிஸ்தானை எதிர் கொள்கிறது. அந்தப் போட்டிக்கு சகல டிக்கெட்டுகளும் விற்றுப்பெற்றுவிட்டதாக ஐசிசி அறிவித்துள்ளது. கொரோனா அச்சம் இருப்பினும் ரசிகர்கள் இப்போட்டியை காண அலை மோதுகினறனர்.
உலகளாவிய ரீதியில் இந்தப்போட்டிக்கு எதிர்பார்ப்பு இருக்கின்றது
இதுவரை வெற்றி பெறாத பாக்கிஸ்தான் அணி இந்த வருடம் இந்தியாவை வீழ்த்தி சரித்திரம் படைக்குமா அல்லது 6 வது வெற்றியை சுவைக்குமா இந்தியா?
(றிழ்ஹான் வாஹித் )
FB பதிவு