இந்திய அணிக்கு எதிராக வரலாற்று சாதனை படைத்தது இலங்கையின் இளம் அணி, தொடர் இலங்கை வசம்..!
இலங்கைக்கான கிரிக்கெட் சுற்றுலாவை மேற்கொண்ட இந்திய அணிக்கும் இலங்கை அணிக்கும் இடையிலான மட்டுப்படுத்தப்பட்ட போட்டிகள் கொண்ட தொடர் வெற்றிகரமாக நிறைவுக்கு வந்துள்ளது.
முன்னதாக ஒருநாள் தொடரை 2 க்கு 1 என கைப்பற்றிய இந்திய அணி, இந்த தொடரை 1_2 என இழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இலங்கை அணி பல்வேறு விதமான விமர்சனங்கள், நெருக்கடிகள், குற்றச்சாட்டுகளுக்கு மத்தியில் ஷானக தலைமையில் இளம் அணியாக இந்தியாவை எதிர்கொண்டது.
மிகச்சிறப்பான திறமை வெளிப்பாடுகளை காண்பித்து இலங்கை அணி, இந்தியாவுடனான இந்த தொடரை 2 – 1 என கைப்பற்றி அசத்தியமை பாராட்டத்தக்கது.
முதலாவது போட்டியில் 38 ஓட்டங்களால் தோல்வியைத் தழுவினாலும் ,அடுத்து வந்த இரண்டு ஆட்டங்களிலும் மிகச் சிறப்பான வெற்றி இலங்கை அணிக்கு கிடைத்திருக்கிறது.
இந்திய வீரர்கள் கொரோனா தாக்கம் காரணமாக முழுமையான அணியை அவர்களால் தேர்வு செய்ய முடியாத அவல நிலையை எதிர்கொண்டர். ஆயினும் இன்றைய போட்டியின் முதலாவது ஓவரிலேயே துஷ்மந்த சமீர அணித்தலைவர் தவானை ஆட்டமிழக்கச் செய்து இந்தியாவின் சரிவை ஆரம்பித்து வைத்தார், பின்னர் பிறந்த நாள் கொண்டாடிய ஹசரங்க ரசிகர்களுக்கு பிறந்த நாள் பரிசாக ஒரே ஓவரிலேயே 2 விக்கெட்டுகளை கைப்பற்ற இந்தியணி மிகப்பெரிய தடுமாற்றத்தை சந்தித்தது.
இறுதியில் இந்திய அணி 8 விக்கெட்டுக்களை இழந்து 81 ஓட்டங்களை மட்டுமேதான் பெற்றுக்கொண்டது. 82 எனும் இலகுவான இலக்கோடு துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்த வெற்றியின் மூலமாக 2-1 என தொடர் இலங்கை வசமானது .போட்டியில் நாயகனாகவும், தொடர் நாயகனாகவும் ஹசரங்க தேர்வானார். இந்த வெற்றி மூலம் இலங்கை கிரிக்கெட் அணி மீது இருந்த அவநம்பிக்கையும், இலங்கை கிரிக்கெட் அணி தொடர்பான விமர்சனங்களும் துடைத்து எறியப்பட்டுள்ளது.
இலங்கை கிரிக்கெட் மீது ஏதோ ஒருவித நம்பிக்கைை ரசிகர்களுக்கு எள ஆரம்பித்ததுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
கொரோனா நெருக்கடிக்குள்ளும் இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கிடையிலான தொடர் வெற்றிகரமாக நடந்தேறியமை ரசிகர்களுக்கு விருந்து எனலாம்.
8 தொடர்களில் தோல்வியையே தழுவாமல் பயணித்த இந்தியாவின் தொடர் வெற்றிகளுக்கு இலங்கை அணி முற்றுப்புள்ளி வைத்துள்ளது. 2008 ம் ஆண்டுக்கு பின்னர் ஒரு தொடரில் இலங்கை, இந்தியாவை வெற்றி கொண்டுள்ளது.