இந்திய அணிக்கு ஏழரைச் சனி ?

இந்திய அணிக்கு ஏழரைச் சனி ?

“ப்ளீஸ் என்ன விட்டு விடு. என்ன எதுவும் பண்ணிராதே. ப்ளீஸ் என்ன விட்டுடு. ஒன்ன கெஞ்சிக் கேட்டுக்குறன். ப்ளீஸ் ப்ளீஸ் ….வேணாம்….ஆ….ஆ….ஆ….ஆ….”

இந்திய அணி காலைப் பிடித்து கெஞ்சிய அந்தக் கதறல் ஒலி மூன்று நாட்களுக்கு முன்னர் எப்படி பாகிஸ்தான் அணியின் காதுகளில் விழவில்லையோ அது போலத்தான் இன்று இலங்கை அணியின் காதுகளிலும் கடைசி வரைக்கும் அந்தக் கதறல் ஒலி கேட்கவே இல்லை.

கருணையே இல்லாத கல் நெஞ்சுக்கார கபாலிகள்.

ரோஹித்துக்கு ஏழரைச் சனி காலரைத் தூக்கி விட்டுக் கொண்டு வேலை செய்கின்றது. Back to back அடிமேல் அடி.

இரண்டு நாட்களுக்கு முன்னால் பாகிஸ்தானிடம் வாங்கி கட்டிக் கொண்ட இந்திய அணி இதோ இலங்கை அணியிடம் நிலாக் காய்கிற இன்றைய இரவில் (2022/09/06) தரமான சம்பவத்தை சந்தித்திருக்கின்றது.

கோலி, ராகுல், ரோஹித், பாண்டியா, பாண்ட் என்று கல்லா கட்டி ஐபிஎல் காரர்களை பரணில் அடுக்கி வைத்துக் கொண்டு இருந்தாலும் இன்று இந்திய அணி தமது ஆரம்பம் துடுப்பாட்டத்தில் 173 ஓட்டங்களை முக்கி முக்கித்தான் சேர்த்தது. இன்று ஏனோ தெரியவில்லை வழமையான இந்திய அணியின் துடுப்பாட்டம் மெகா சைஸில் மிஸ்ஸிங்காக இருந்தது. இன்றைய ஆட்டத்தை கூர்மையாக பார்த்தவர்களுக்கு அது புரிந்திருக்கும். ரோஹித் ,சூர்ய குமார் யாதவ் தவிர இனி எல்லா துடுப்பாட்டுவீர்களும் சொதப்பலால் சொர்க்கத்துக்கு போயிருந்தார்கள்.

 

அப்போதே புரிந்தது பாகிஸ்தானிடம் பட்டு மாயோ மாயென்று மாய்ந்த அணி இன்று இலங்கையிடம் பட்டு மாளப் போகின்றது என்று. 173 ஓட்டங்களை துரத்தி தமது batting Chasing ஐ ஆரம்பித்த இலங்கை அணியினுடைய ஆரம்பக்கட்ட துடுப்பாட்டம் அற்புதமாக இருந்தது.

பெத்தும் நிஸ்ஸங் மற்றும் குசல் மெண்டிஸின் அரைச்சதங்களில் வழமைக்கு மாறான தன்னம்பிக்கை தெறி லெவல் மெரஸ்சலாக இருந்தது. இருவரும் அற்புதமாக ஆடினார்கள். கொஞ்ச நேரம் இந்திய அணியினுடைய பந்துவீச்சாளர்களை அவர்கள் செய்ததெல்லாம் துவம்சம். துவசம் தவிர வேறொன்றுமில்லை மிலோர்ட்.

ஆனால் 97 ஓட்டங்கள் வரை விக்கெட் இழப்பின்றி பிரயாணம் செய்த இலங்கை அணியினுடைய மிடில் ஓடர் வழமை போலவே..வ்வே….. படுத்துக்கொண்டது. மள மளவென்று நான்கு கிரிக்கெட்டுகள். அசலங்க , குணதிலக அந்த மாதிரி கஞ்சி ஆத்துகின்றார்கள். இதே லெவல் மிடில் ஓர்டரோடு ஒருவேளை பாகிஸ்தானுடன் இறுதி ஆட்டத்தில் மோத நேர்ந்தால் பாகிஸ்தானின் இரக்கமே இல்லாத பந்துவீச்சாள படுவார்கள் கருணை காட்ட மாட்டார்கள் என்பது என் கணிப்பு. அவர்கள் இந்திய அணியின் பந்துவீச்சாளர்கள் போல இன்ச் சைசுக்கும் இருக்க மாட்டார்கள். இந்த இடத்தில் இலங்கை அணி எக்ஸ்ட்ரா கெயார் எடுத்தேயாக வேண்டும்.

இந்திய அணியுடைய வெற்றி வெளிச்சம் கொஞ்ச நேரம் தெரிந்தது. ஆனாலும் பானுக ராஜபக்ஷ அசத்தல் அஜித்தாக வந்து நின்றார். இன்றைய இலங்கை ஆட்டத்தில் ஆரம்ப துடுப்பாட்ட வீரர்கள் நிசங்க மற்றும் குசல் மெண்டிஸ் இருவரின் ஆட்டத்தை விட தெரியவில்லை பானுக ராஜபக்ஷ வசீகரம் செய்கின்றார். பானுக இலங்கை அணியின் நெம்பு கோள். பானுக பிட்ச்சலில் இருக்கும் வரை இலங்கை
க்கான வெற்றி Verified.

Banuka is the dangerous and lethal dragon. பிட்ச்சில் துடுப்போடு பானுக நிற்கின்ற போது சிக்சர்களுக்காக ஆகாயம் அகன்ற வாய் திறந்து காத்துக் கொண்டிருக்கின்றது.

இந்திய அணியை வீழ்த்தி அற்புதமான ஒரு இரவு விருந்தினை படைத்துச் சென்ற இலங்கை அணிக்கு ஹார்ட் ஃபெல்ட் கங்ராட்ஸ்.

Back to back அடி வாங்கியே இடுப்பு முள் உடைய வேண்டுமென்று இந்திய அணியின் தலையிலே கடவுள் எழுதி வைத்திருந்தால் யாரால்தான் அவர்களை காப்பாற்ற முடியும்.

Well done lions.
2022/09/06

சபருல்லா ஹாசீம் – சட்டத்தரணி