இந்திய தேசிய கிரிக்கெட் அணிக்கு மீண்டும் திரும்ப முடியும் எனும் நம்பிக்கை இருப்பதாக இந்திய கிரிக்கெட் வீரர் தினேஷ் கார்த்திக் அறிவித்துள்ளார்.
2019 உலக கிண்ண போட்டிகளுக்கு பின்னர் இந்திய தேசிய அணியில் வாய்ப்பில்லாமல் அவதிப்படும் கார்த்திக், சாயிட் முஷ்டாக் அலி T20 தொடரில் தமிழ்நாடு அணியின் தலைவராக விளையாடி கிண்ணத்தை வென்று கொடுத்தார்.
துடுப்பாட்டத்திலும் மிக சிறப்பாக ஜொலித்த கார்த்திக், அடுத்துவரும் IPL போட்டிகளில் திறமையை காட்டி இந்தாண்டு நவம்பர் இந்தியாவிலும் அடுத்தாண்டு அவுஸ்திரேலியாவில் இடம்பெறும் T20 உலக கிண்ண போட்டிகளுக்கான இந்திய அணியில் இடம்பிடிக்க முடியும் என்று நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
தினேஷ் கார்த்திக்கிற்கு இப்போது வயது 35 என்பதும் குறிப்பிடத்தக்கது.