இந்திய அணியின் கேப்டனாக மாறும் கேஎல் ராகுல் – தகவல்!

இந்திய அணியின் கேப்டனாக மாறும் கேஎல் ராகுல் – தகவல்!

ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்றுவரும் டி20 உலகக்கோப்பை தொடரில் இந்திய அணி அடுத்தடுத்து படுதோல்விகளைச் சந்தித்து, தற்போது அரையிறுதிச்சுற்றுக்கான வாய்ப்பை ஏறத்தாழ இழந்துள்ளது.

இந்நிலையில் நடப்பு டி20 உலகக்கோப்பை தொடருடன் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி, டி20 அணிக்கான கேப்டன்சி பொறுப்பிலிருந்து விலகுவதாக ஏற்கெனவே அறிவித்துள்ளார்.

இதையடுத்து விராட் கோலிக்கு பிறகு இந்திய அணியின் கேப்டனாக யார் நியமிக்கப்படுவார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் உள்ளது. அதன்படி இந்திய டி20 அணியின் அடுத்த கேப்டனாக ரோஹித் சர்மா நியமிக்கப்படுவதற்கே அதிக வாய்ப்புகள் இருப்பதாக தெரிக்கிறது.

இந்நிலையில் இந்திய டி20 அணியின் அடுத்த கேப்டனாக அதிரடி தொடக்க வீரர் கேஎல் ராகுல் நியமிக்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதுகுறித்து பிசிசிஐ அதிகாரி ஒருவர் கூறுகையில், “மூத்த வீரர்களுக்கு ஓய்வு தேவைப்படும், மேலும் கேஎல் ராகுல் இந்திய டி20 அணிக்கு தலைமை தாங்குவது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது” என்று தெரிவித்துள்ளார்.

ஏற்கெனவே ஐபிஎல் தொடரில் பஞ்சாப் கிங்ஸ் அணியின் கேப்டனாக கேஎல் ராகுல் செயல்பட்டுள்ளதால், அவருக்கு கேப்டன்சிக்கான அனுபவம் உள்ளது. இதையடுத்து இம்மாதம் நடைபெறவுள்ள நியூசிலாந்து அணிக்கெதிரான தொடரில் கேஎல் ராகுல் இந்திய அணியை வழிநடத்துவார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

#ABDH