இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் பதவியில் டிராவிட்-BCCI தகவல்..!

இந்திய கிரிக்கெட் அணியின் தற்போதைய வெற்றிகள் பலவற்றின் காரணகர்த்தாவாக திகழும் டிராவிட், இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக மாட்டாரா எனும் எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் பல நெடுங்காலமாக நிலவி வந்தது.

இப்போதைய நிலையில் அதற்கான பதில் கிடைத்திருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

ஜூலை மாதம் இலங்கைக்கான கிரிக்கெட் சுற்றுலாவில் இந்திய கிரிக்கெட் அணி விளையாடவுள்ளது, ஆயினும் அந்த காலப்பகுதியில் இந்திய டெஸ்ட் அணி இங்கிலாந்தில் டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடர் மற்றும் இங்கிலாந்துடனான டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்கவுள்ளது.

ஆதலால் இளம் அணியொன்று இலங்கை வந்து விளையாடும் நிலையே காணப்படுகின்றது, இதனால் இந்த அணியை பயிற்றுவிக்கும் வாய்ப்பு டிராவிட்டுக்கு காணப்படுவதாக இந்திய கிரிக்கெட் சபையின் முக்கியஸ்தர் ஒருவர் PTI செய்தி ஸ்தாபனத்துக்கு தெரிவித்திருக்கிறார். கடந்த 17 ம் திகதி இதுதொடர்பாக பேசப்பட்டுள்ளதாகவும் தெரியவருகின்றது.

 

டிராவிட் தலைமை பயிற்சியாளராகவும் அவருக்கு உதவியாக இந்திய இளையோர் அணியின் (Under 19 ) பயிற்சியாளராக திகழ்ந்த பரஸ் மப்ரேயும் தொழில்படவுள்ளதாகவும் செய்திகள் குறிப்பிடுகின்றன.

ஹர்டிக் பாண்டியா, தவான், ஷிரேயாஸ் ஐயர் ஆகிய மூவரில் ஒருவர் அணியின் தலைவராகவுள்ளதாகவும் PTI செய்திசேவை குறிப்பிடுகின்றது.