இந்திய அணியில் இடம்பிடித்த மஹேலவின் வாரிசு…!

இந்திய அணியில் இடம்பிடித்த மஹேலவின் வாரிசு…!

இங்கிலாந்தை சந்திக்கவுள்ள இந்திய T20 அணி விபரம் சற்றுமுன்னர் அறிவிக்கப்பட்ட நிலையில் இதிலே மஹேல ஜெயவர்த்தன பயிற்சியாளராக இருக்கும் மும்பை இந்தியன்ஸ் அணியின் முக்கிய வீரரான சூரியகுமார் யாதவ் இடம்பெற்றுள்ளார்.

நீண்டகாலமாக மிகச்சிறப்பாக மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடிவந்தாலும், இந்திய தேர்வாளர்கள் சூரியகுமார் யாதவை அணியில் சேர்க்காமை விமர்சனங்களை தோற்றுவித்திருந்தது.

இந்தநிலையில் முதல்முறையாக சூரியகுமார் யாதவ் இந்திய தேசிய குழாமுக்கு அழைக்கப்பட்டுள்ளமை சிறப்பம்சமாகும்.இங்கிலாந்துடன் இடம்பெறவுள்ள 5 போட்டிகள் கொண்ட T20 தொடருக்கான அணியிலியேயே இணைக்கப்பட்டுள்ளார்.

30 வயதான சூரியகுமார் யாதவ் 101 IPL போட்டிகளில் விளையாடி 2024 ஓட்டங்களைக் குவித்துள்ளார், கடந்த பல பருவங்களாக இந்திய தேர்வாளர்கள் கதவை தட்டிக்கொண்டே இருந்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

பூம்ராவுக்கு ஓய்வு கொடுக்கப்பட்டாலும் 4 மும்பை இந்தியன்ஸ் வீரர்கள் அணியில் இடம்பெற்றவுள்ளமை கவனிக்கத்தக்கது.
ரோஹித் சர்மா, ஹர்டிக் பாண்டியா அகியோருடன் முதல் முறையாக சூரியகுமார் யாதவ் மற்றும் இஷான் கிஷான் ஆகியோரும் அணியில் இடம்பெற்றுள்ளனர்.

அணி விபரம்.

விராட் கோஹ்லி (தலைவர் ),
ரோஹித் சர்மா (உதவி தலைவர் ),
KL ராகுல் ,
ஷிகர் தவான்,
ஷ்ரேயஸ் ஐயர்,
சூரியகுமார் யாதவ்,
ஹர்டிக் பாண்டியா ,
ரிஷாப் பான்ட் (விக்கெட் காப்பாளர் ),
இஷான் கிஷான் (விக்கெட் காப்பாளர் ),
யுஸ்வேந்த்ரா சஹால்,
வருண் சக்ரவர்த்தி ,
அக்சார் பட்டேல் ,
வாஷிங்டன் சுந்தர் ,
ராகுல் தேவாதியா,
T நடராஜன்,
புவனேஸ்வர் குமார் ,
தீபக் சஹர்,
நவ்தீப் சைனி,
ஷரத்துல் தாகூர் .