இந்திய அணியில் இடம்பெற்ற தமிழக வீரர்கள் இருவருக்கு சிக்கல் நிலைமை…!

இந்திய மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான 5 போட்டிகள் கொண்ட T20 தொடருக்கான அணியில் இடம்பெற்றிருந்த தமிழக வீரர்கள் இருவருக்கு அணியில் இடம்பிடிக்க சிக்கல் நிலைமை உருவாகியுள்ளது.

தமிழக வீரர் வருண் சக்கரவர்த்தி அவரது உடல்தகுதி சோதனையில் சித்தியடைய தவறிய நிலையில், அவரால் இந்திய அணியில் இடம்பிடிக்க முடியாத நிலை உருவாகியுள்ளது.

அதேபோன்று வேகப்பந்து வீச்சாளர் நடராஜனும் தோள்பட்டை உபாதையால் அவதிப்படும் நிலையில் அவராலும் ஆரம்ப போட்டிகளில் இடம்பிடிக்க முடியாது போகும் என்ற செய்திகள் வெளிவந்துள்ளன.

வருண் சக்கரவர்த்தி ஏற்கனவே அவுஸ்திரேலிய தொடரில் இடம்பிடித்தும் உபாதை காரணமாக விளையாட முடியாத நிலையில் அவருக்கான மாற்று வீரராகவே நடராஜன் தேர்வாகி சர்வதேச பிரபலத்தை எட்டினார் என்பதும் முக்கியமானது.

மீண்டும் வருண் சக்கரவர்த்தி துரதிஷ்டாசாலியாக மாறும் வாய்ப்பு உருவாகியுள்ளது. இந்திய கிரிக்கெட் சபை இதுதொடர்பில் உறுதிபட எதனையும் இதுவரை தெரிவிக்க வில்லை என்பதும் முக்கியமானது.