இந்திய அணியில் திடீரென 5 வர் குழாமுக்குள் இணைப்பு- தமிழக வீரர் சாய் கிஷோரும் அணியில்..!

இந்திய அணியில் திடீரென 5 வர் குழாமுக்குள் இணைப்பு- தமிழக வீரர் சாய் கிஷோரும் அணியில்..!

இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கிடையிலான 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரின் இரண்டாவது போட்டி இன்று இரவு 8 மணிக்கு திட்டமிட்டபடி இடம்பெறவுள்ளது.

இந்தியாவின் சகலதுறை ஆட்டக்காரர் குருனால் பாண்டியாவுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதை தொடர்ந்து, நேற்று இடம்பெறவிருந்த போட்டி ரத்து செய்யப்பட்டு இன்றைய நாளுக்கு ஒத்திவைக்கப்பட்டது.

பாண்டியாவுடன் நேரடித் தொடர்பில் இருந்த 8 பேர் அடுத்துவரும் 2 போட்டிகளிலும் விளையாட மாட்டார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

பாண்டியா சகோதரர்கள் சூரியகுமார் யாதவ் ,இஷன் கிஷன் ,பிரித்வி ஷா, தெவுதுட் படிக்கல் ,கிருஷணப்பா கௌதம் ஆகிய வீரர்கள் நேரடி தொடர்பு கொண்டிருந்ததாகவும் அவர்களும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அறியப்படுகிறது.

தவானும் இந்தப் பட்டியலில் இருப்பதாக செய்திகள் முன்னர் வெளியாகியிருந்தாலும், இன்றைய போட்டியில் அவர் அணித்தலைமை ஏற்பார் என்றும் பிந்திய செய்திகள் குறிப்பிடுகின்றன.

குறித்த 7 வீரர்கள் அணியில் இல்லாத காரணத்தால் ஏற்பட்டுள்ள வீரர்கள் பற்றாக்குறையை நிவர்த்திக்க, அணியில் வலைப்பயிற்சி பந்துவீச்சாளர்களாக இணைக்கப்பட்ட 5 வீரர்கள் அணியின் பிரதான குழாமுக்கு இணைக்கப்பட்டுள்ளனர்.

இஷான் போரல், சந்தீப் வாரியர், அர்ஷிதீப் சிங், சாய் கிஷோர், சிமர்ஜீத் சிங் ஆகியோர் பிரதான குழாமுக்குள் இணைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.