இந்திய அணியில் மீண்டும் நடராஜன்…!

இந்திய கிரிக்கெட் அணியில் மீண்டும் நடராஜன் இணைத்துக்கொள்ளப்பட சந்தர்ப்பம் வாய்த்துள்ளது.

அவுஸ்திரேலியாவில் கிரிக்கெட் அறிமுகம் மேற்கொண்ட நடராஜன், இப்போது இடம்பெறும் இங்கிலாந்துடனான டெஸ்ட் தொடரில் சேர்க்கப்படவில்லை, அவரது குழந்தைப் பிறப்புக்கான விடுமுறை வழங்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில் 20 ம் திகதி ஆரம்பமாகவிருக்கும் விஜய் ஹசாரே தொடருக்கான தமிழ்நாடு அணியில் நடராஜன் இணைக்கப்பட்டிருந்தார்.

ஆயினும் அவரை தமிழ்நாடு அணியிலிருந்து விடுவிப்பு செய்யுமாறு இந்திய கிரிக்கெட் சபை கோரிக்கை விடுத்துள்ளது, இதனை ஏற்று தமிழ்நாடு கிரிக்கெட் சபையும் அவரை விடுவித்துள்ளது.

இந்தநிலையில் நடராஜன் மீண்டும் விரைவாக இந்திய தேசிய குழாமுக்கு வரவுள்ளார் எனும் நம்பிக்கை பிறந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.