இந்திய அணியில் வாய்ப்பு மறுப்பு – இங்கிலாந்து குழாமில் இணைத்த இந்தியர்கள் சுந்தர், அவேஷ் கான்…!

இந்திய அணியில் வாய்ப்பு மறுப்பு – இங்கிலாந்து குழாமில் இணைத்த இந்தியர்கள் சுந்தர், அவேஷ் கான்…!

இங்கிலாந்துக்கான கிரிக்கெட் சுற்றுலாவை மேற்கொண்டுள்ள இந்திய அணிக்கும் இங்கிலாந்து அணிக்கும் இடையிலான டெஸ்ட் தொடர் வரும் ஆகஸ்ட் மாதம் 4 ம் திகதி ஆரம்பிக்கவுள்ளது.

இதற்கு முன்னர் இன்று இந்திய அணி இங்கிலாந்தில் பயிற்சிப் போட்டியில் விளையாடுகின்றது.

இந்த போட்டியில் இந்திய வீரர்களான வோஷிங்டன் சுந்தர், அவேஷ் கான் ஆகியோர் இந்தியாவுக்கு எதிரான பயிற்சிப் போட்டியில் இங்கிலாந்தின் County XI அணிக்காக விளையாடி வருகின்றனர்.

இந்த சம்பவம் இந்திய ரசிகர்ளிடம் பலத்த கேள்வியை தோற்றுவித்துள்ளது, இதற்க்கு இந்திய கிரிக்கெட் சபையின் செயலாளர் ஜெ ஷா விளக்கம் கொடுத்துள்ளார்.

BCCI இங்கிலாந்து கிரிக்கெட் சபையை தங்கள் ஐந்து டெஸ்ட் தொடர்களுக்கு முன்னதாக ஒரு பயிற்சி ஆட்டத்தை ஏற்பாடு செய்யுமாறு கோரிய பின்னர் அதற்கான வாய்ப்பு கிடைத்தது..

BCCI செயலாளர் ஜெய் ஷா கூறுகையில், கவுன்டி செலக்ட் லெவன் அணிக்காக தங்களது இரண்டு கிரிக்கெட் வீரர்களை விளையாட அனுமதிக்குமாறு ECB கோரிக்கை விடுத்தது.

காயம் காரணமாக ஒரு சிலருக்கு விளையாட முடியாமல் இருப்பதாகவும் மற்றும் ஒரு COVID-19 தொற்று காரணமாக சில வீரர்கள் தொற்றுடையவர்களுடன் நெருங்கிய தொடர்பில் இருப்பதுதான் இதற்கு காரணம் என்றும் ஜே ஷா விளக்கம் கொடுத்துள்ளார்.

எது எவ்வாறாயினும் ரசிகர்களிடம் இந்த விடயம் இன்று பேசுபொருளாக அமைந்துள்ளது.