இந்திய மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான டெஸ்ட் தொடரில் இந்திய அணியுடன் இல்லாதது எனக்கு மிகுந்த மனவேதனையைக் கொடுக்கிறது என்று தமிழக வீரர் நடராஜன் தெரிவித்துள்ளார்.
ஆயினும் 6 மாதங்கள் குடும்பத்துடன் இல்லாததால் எனக்கு இந்த ஓய்வு அவசியமானதாக இருப்பதையும் மறுப்பதற்கில்லை என்றும் நடராஜன் தெரிவித்துள்ளார்.
இந்திய மற்றும் அவுஸ்திரேலிய அணிகளுக்கிடையிலான தொடரின் போது அனைத்துவகையான போட்டிகளிலும் அறிமுகமாகி அசத்திய நடராஜன், இங்கிலாந்துடனான டெஸ்ட் குழாமில் இணைக்கப்படவில்லை.
அவருக்கு இந்திய கிரிக்கெட் சபை ஓய்வு வழங்கியுள்ள நிலையிலேயே நடராஜன் இந்த கருத்தை வெளியிட்டுள்ளார்.