25 வயதான வலது கை வேகப்பந்து வீச்சாளர் குல்தீப் சென், உள்ளூர் கிரிக்கெட்டில் மத்தியப் பிரதேசம் மற்றும் இந்தியன் பிரீமியர் லீக்கில் (IPL) ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார், வலது கை வேகப்பந்து வீச்சாளர் தீபக் சாஹருக்கு பதிலாக 2022 ஆசிய கோப்பை அணியில் இடம் பெறுகிறார் என செய்திகள் வெளியாகியுள்ளன.
ஆசிய கோப்பை 2022, இது போட்டியின் 15 வது பதிப்பாகும், இது ஆகஸ்ட் 27 முதல் செப்டம்பர் 11 வரை விளையாட திட்டமிடப்பட்டுள்ளது.
முழு போட்டியும் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் (UAE) நடைபெற உள்ளது, முதல்போட்டியில் இலங்கை ஆப்கானிஸ்தானை எதிர்கொள்கிறது.
ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய தேசிய கிரிக்கெட் அணி, ஆகஸ்ட் 28 ஞாயிற்றுக்கிழமை, துபாய் சர்வதேச மைதானத்தில், பாபர் அசாம் தலைமையிலான பாகிஸ்தான் தேசிய கிரிக்கெட் அணியுடன் மோத உள்ளது.
குறிப்பாக, நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர்கள் ஜஸ்பிரித் பும்ரா மற்றும் ஹர்ஷல் படேல் ஆகியோர் காயங்கள் காரணமாக ஆசிய கோப்பை அணியில் இடம்பெறவில்லை. 15 பேர் கொண்ட இந்திய அணியில் புவனேஷ்வர் குமார், அர்ஷ்தீப் சிங் மற்றும் அவேஷ் கான் ஆகிய மூன்று வேகப்பந்து வீச்சாளர்கள் உள்ளனர்.
மேலும், ஜிம்பாப்வேக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் போது 6 மாத கால காயத்திற்குப் பிறகு மீண்டும் அணிக்கு திரும்பிய வேகப்பந்து வீச்சாளர் சாஹர், ஷ்ரேயாஸ் ஐயர் மற்றும் அக்சர் படேல் ஆகியோருடன் காத்திருப்பு வீரராக பெயரிடப்பட்டார்.
அறிக்கையின்படி குல்தீப்பின் பயிற்சியாளர் அரில் ஆண்டனி, காயத்தால் சஹர் போட்டியில் இருந்து விலகுவார் என்றும் குல்தீப் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார் என்றும் கூறியுள்ளார்.
குல்தீப்பின் சகோதரர் ஜக்தீப் சென் கூறுகையில், குல்தீப் ஆகஸ்ட் 22 அன்று இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபையின் (BCCI) தலைமை தேர்வாளர் சேத்தன் சர்மாவிடமிருந்து அழைப்பு வந்ததாகவும், அவர் அணியில் தேர்வு செய்யப்பட்டது குறித்து அவருக்குத் தெரிவிக்கப்பட்டதாகவும் கூறினார்.
2018-19 ரஞ்சி டிராபியில் 2018 நவம்பரில் மத்தியப் பிரதேசத்திற்காக முதல்தரப் போட்டியில் அறிமுகமான குல்தீப், இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) 2022 மெகா ஏலத்தில் 20 லட்ச ரூபாய்க்கு ராஜஸ்தான் ராயல்ஸால் வாங்கப்பட்டார்.
போட்டியில் 145 கிமீ வேகத்தில் தொடர்ந்து பந்து வீசும் திறமையால் அனைவரையும் கவர்ந்தார்.
ஒட்டுமொத்தமாக, குல்தீப் சென் இந்தியன் பிரீமியர் லீக் 2022 இல் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக 7 ஆட்டங்களில் 9.41 என்ற சிக்கனப்்பெறுதியில் 29.6 சராசரியிலும் 8 விக்கெட்டுகளை வீழ்த்தியவர்.
எதுஎவ்வாறாயினும் இந்த செய்தி உறுதிப்படுத்தப்படவில்லை என்பதால் மேலதிக செய்திகளுக்காக காத்திருக்கலாம்.