இந்திய, இங்கிலாந்து -டெஸ்ட் தொடரில் அதிக ஓட்டங்களைப் பெற்றவர்கள் விபரம்..!

இந்திய, இங்கிலாந்து -டெஸ்ட் தொடரில் அதிக ஓட்டங்களைப் பெற்றவர்கள் விபரம்..!

இந்திய மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் 4 ஆட்டங்கள் நிறைவுக்கு வந்தன.

5வது போட்டியில் கொரோனா காரணமாக ரத்து செய்யப்பட்டது, இந்த நிலையில் ஐந்தாவது இறுதியுமான போட்டி சிலவேளைகளில் அடுத்த ஆண்டு இடம்பெறலாம் என செய்திகள் வெளிவந்தன.

ஆயினும் கூட இதுவரைக்கும் இடம்பெற்ற இந்த நான்கு போட்டிகளில் அதிக ஓட்டங்களை பெற்றுக் கொண்ட வீரர்கள் வரிசையில் இங்கிலாந்து அணித் தலைவர் ஜோ ரூட் (564 ஓட்டங்கள்) முதலிடத்தில் இருக்கிறார்.

அதனைத் தொடர்ந்து 4 இடங்களையும் இந்திய வீரர்களை கைப்பற்றியுள்ளனர், ரோகித் சர்மா (368 ஓட்டங்கள்), லோகேஷ் ராகுல் (315) , புஜாரா (227) , அதேபோன்று விராட் கோலி (218) ,ஜடேஜா (160) ஆகியோர் அடுத்தடுத்த இடங்களைப் பிடித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

அதிக ஓட்டங்கள் பெற்ற இந்திய வீரர்கள் விபரம் இணைப்பு ??