இந்திய, இங்கிலாந்து டெஸ்ட் ஆரம்பம்- நாணய சுழற்சி யாருக்கு வெற்றி ..?

இந்திய, இங்கிலாந்து டெஸ்ட் ஆரம்பம்- நாணய சுழற்சி யாருக்கு வெற்றி ..?

இந்திய இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான 3 வது டெஸ்ட் போட்டி அஹமதாபாத் , நரேந்திர மோடி மைதானத்தில் பகலிரவு டெஸ்ட் போட்டியாக ஆரம்பித்துள்ளது.

இந்த போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இங்கிலாந்து அணி முதலில் துடுப்பாடும் விருப்பை வெளியிட்டுள்ளது.

இங்கிலாந்து அணியில் ஆண்டர்சன், ஆர்ச்சர், பெயர்ஸ்டோ , கிரவ்லி ஆகியோர் அணிக்குள் வந்துள்ளனர். மொயின் அலி,ஒல்லி ஸ்டோன் , ரோரி பேர்ன்ஸ் , லோரன்ஸ் ஆகியோர் அணியிலிருந்து நீக்கப்பட்டுள்ளனர்,

இந்தியா 3 சுழல் பந்து வீச்சாளர்களோடு களமிறங்குகின்றது.
குல்தீப் யாதவ், சிராஜ் ஆகியோருக்கு பதிலாக பூம்ரா மற்றும் சுந்தர் ஆகியோர் அணிக்குள் வந்துள்ளனர்.

இந்தியா சார்பில் இஷாந்த் சர்மா இன்று 100 வது டெஸ்ட்டில் களமிறங்கியுள்ளார்.