இந்திய-இங்கிலாந்து தொடர் குறித்து கிரேம் சுவான் கருத்து.

இந்திய, இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் எதிர்வரும் 5 ம் திகதி சென்னை சேப்பாக்கம் சிதம்பரம் மைதானத்தில் ஆரம்பிக்கவுள்ளது.
இந்த போட்டி தொடரில் பங்கேற்க இங்கிலாந்து அணி சென்னையை சென்றடைந்துள்ளது .
இந்த நிலையில் இந்தியாவுடனான டெஸ்ட் தொடரை இந்தியாவில் வைத்து வெல்வது என்பது, ஆஷஸ் வெற்றியை விட வலுவானதாக இருக்கும் என்று இங்கிலாந்து அணியின் முன்னாள் சுழல் பந்து வீச்சாளர் கிரேம் சுவான் கருது வெளியிட்டுள்ளார்.
அன்மையில் இலங்கையில் நடைபெற்ற 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இங்கிலாந்து அணி 2-0 என்று டெஸ்ட் தொடரை வென்றமை குறிப்பிடத்தக்கது.