இந்திய, இங்கிலாந்து தொடரில் இறந்தவருக்காக அவர் நண்பர்கள் செய்த நெகிழ்ச்சிமிகு சம்பவம்..! ( அவருக்காகவும் ஒரு இருக்கை ஒதுக்கினர்)
இங்கிலாந்துக்கான கிரிக்கெட் சுற்றுலாவை மேற்கொண்டுள்ள இந்திய அணிக்கும் இங்கிலாந்து அணிக்கும் இடையிலான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் இன்று ட்ரெண்ட் பிரிட்ஜ் மைதானத்தில் ஆரம்பித்துள்ளது.
இந்த போட்டியில் இங்கிலாந்தின் ட்ரெண்ட் பிரிட்ஜ் மைதானத்தில் ரசிகர்கள் செய்த செயல் பெருமளவில் சமூகவலைத்தளங்களில் பாராட்டி பகிரப்படுகின்றது.
ஜான் கிளார்க்.
இங்கிலாந்தின் பரம கிரிக்கெட் ரசிகர், இங்கிலாந்தின் ட்ரெண்ட் பிரிட்ஜ் மைதானத்தில் கடந்த 40 ஆண்டுகளாக இடம்பெற்ற எந்த போட்டியையும் அவர் தவறிவிட்டது கிடையாது.
ஆனாலும் அண்மையில் சுகயீனம் காரணமாக அவர் மரணத்தை தழுவினார், இதனால் இன்று ட்ரெண்ட் பிரிட்ஜ் மைதானத்தில் அவர் இல்லாமலேயே அவரது நண்பர்கள் இன்றைய போட்டியை பார்க்க சென்றிருந்தனர்.
ஆயினும்கூட அவரது நண்பனுக்காகவும் ஒரு டிக்கெட் கொள்வனவு செய்து, ஒரு இருக்கையை அவருக்காகவே ஒதுக்கி, மற்றைய இருக்கைகளில் தாங்கள் இருந்து போட்டியைப் பார்த்து ரசிக்கும் காட்சிகள் வெளியாகியுள்ளன.
இறந்தாலும் இருப்பவர்களால் நினைவுகூரப்படும் பாக்கியம் ஜான் கிளார்க் க்கு கிடைத்துள்ளமை பெரும் பாக்கியமே.