இந்திய ,இங்கிலாந்து தொடரில் வெற்றியாளர் யார் ? மைக்கல் வோகன் அதிர்சிதரும் கணிப்பை அறிவிப்பை வெளியிட்டார்..!

இந்திய ,இங்கிலாந்து தொடரில் வெற்றியாளர் யார் ? மைக்கல் வோகன் அறிவிப்பை வெளியிட்டார்..!

இங்கிலாந்து சுற்றுலா மேற்கொண்டிருக்கும் இந்திய அணிக்கும் இங்கிலாந்து அணிக்கும் இடையிலான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நொட்டிங்கம் மைதானத்தில் நாளை (4)ஆரம்பமாகவுள்ளது.

இந்த நிலையில் இந்தியா தொடர்பாக  தகுதிக்தகுறைவான கருத்துக்களை வெளியிட்டு வரும் முன்னாள் இங்கிலாந்து அணித்தலைவர் வோகன் ஒரு ஆச்சரியமான கணிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார் .

இந்த தொடரை இந்திய அணி வெற்றி கொள்ளும் என்பதே அந்தக் கணிப்பாகும், 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 3-1 என இந்தியா வெற்றி கொள்ள அதிகமான வாய்ப்பு இருப்பதாக அவர் தெரிவித்தார்.

குறிப்பாக இதே இங்கிலாந்து அணி நியூசிலாந்துடன் தோல்வியை தழுவியது, இந்த காலப்பகுதி சுழற்பந்து வீச்சுக்கு சாதகமாக இருக்கும் என்பதால், இந்த போட்டி தொடரில் 3-1 என இந்தியா வெற்றி கொள்ளும் என குறிப்பிட்டுள்ளார்.

 

பென் ஸ்டோக்ஸ் அணியில் இல்லாதது பெருத்த பின்னடைவாக இங்கிலாந்துக்கு இருக்கும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

“ஸ்டோக்ஸ் இல்லாததால், அணி சமநிலைப்படுத்துவது இங்கிலாந்துக்கு கடினமாக இருக்கும். அவர்கள் குறைவாக ஒரு Batter அல்லது ஒரு பந்துவீச்சாளர் குறைவாக செல்வார்கள்.

 ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர்  மாதகாலம் சுழல் பந்து பெரும் பங்கு வகிக்கும்.  இதைச் சொல்வதை நான் வெறுக்கிறேன், இந்தியா 3-1 என்ற கணக்கில் வெல்லும், ”என்று வோகன் கருத்து தெரிவித்தார்.

Previous articleவங்கதேசத்துடன் டி20: ஆஸி. அணிக்கு புதிய கேப்டன் நியமனம்
Next article142 கோடி ரூபா பெறுமதியான குதிரையுடன் ஒலிம்பிக்கில் களமிறங்கும் இலங்கைப் பெண்..!