இந்திய உலக கிண்ண அணிக்குள் வந்த திடீர் சிக்கல்- முன்னணி சுழற்பந்து வீச்சாளர் உபாதையால் அவதி..!
உலக கிண்ணத்துக்காக அறிவிக்கப்பட்ட 15 பேர் கொண்ட அணியில் இடம்பெற்றிருந்த தமிழகத்தினுடைய சுழற்பந்து வீச்சாளர் வருண் சக்கரவர்த்தி உபாதையால் அவதிப்படுகிறார் என செய்திகள் வெளியாகியுள்ளன.
இந்திய கிரிக்கெட் சபையிடம் இருந்து கிடைக்கும் தகவல்களின் அடிப்படையில் கணுக்கால் உபாதையால் அவதிப்படும் சக்கரவர்த்தி, உலகக்கிண்ண போட்டிகளில் பங்கேற்பதற்கன வாய்ப்புக்கள் சந்தேகத்திற்குரியதாக தெரிகின்றன.
அவரது உபாதை தொடர்பில் அவரை கொல்கத்தா அணியின் மருத்துவர்கள் மட்டுமல்லாது, இந்திய கிரிக்கெட் மருத்துவர்களும் தொடர்ச்சியாக கண்காணித்து வருவதாகவும் செய்திகள் குறிப்பிடுகின்றன.
அதிகமாக உபாதையால் இவர் உலகக்கிண்ணத்தை தவறவிடும் துர்பாக்கிய நிலைக்கு தள்ளப்படுவார் என நம்பப்படுகிறது.
இந்த நிலையில் வருண் சக்கரவர்த்தி இந்திய உலக கிண்ண அணியில் இருந்து விலக்கப்படுவதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன என்று அறிய வருகின்றது.
எதிர்வரும் 10ஆம் திகதிக்குள் உலக கிண்ண அணிகளில் ஏதாவது மாற்றங்கள் செய்ய வேண்டுமாக இருந்தால், ஒவ்வொரு அணியும் மாற்றங்களை மேற்கொள்வதற்கான இறுதி திகதியாக நிர்ணயிக்கப்பட்டு உள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
அதனால் இந்திய உலக கிண்ண அணியில் மாற்றங்களை நாமும் எதிர்பார்க்கலாம்.