இந்திய உலக கிண்ண அணியின் அதிரடி நாயகன் ஓய்வு
இந்திய அணியின் அதிரடி வீரர் யூசுஃப் பதான் அனைத்து வகை கிரிக்கெட் போட்டிகளிலும் இருந்து ஓய்வை அறிவித்துள்ளார்.
2007 T20 கிண்ணம் 2011 50 ஓவர் உலக கிண்ணம் வென்ற இந்திய அணியில் இடம்பிடித்திருந்த யூசுஃப் பதான் 57 ஒரு நாள் போட்டிகளில் 810 ஓட்டங்களையும் 22 T20 போட்டிகளில் 236 ஓட்டங்களையும் பெற்றுள்ளார். பகுதி நேர பந்து வீச்சாளரான இவர் 46 விக்கெட்களையும் எடுத்துள்ளார்.
Centurion மைதானத்தில் தென்னாப்பிரிக்க அணிக்கெதிராக இவர் பெற்ற சதம் இவரது Career Best Moment ஆக என்றும் கொண்டாடப்படும்.
யூசுஃப் பதான் IPL இல் Rajasthan Royals உடன் 2008 இலும் Kolkata Knight Riders உடன் 2012 மற்றும் 2014 ஆம் ஆண்டுகளிலும் கிண்ணம் வென்றுள்ளார். IPL இல் சிறந்த பெறுதிகளை வெளிப்படுத்திய யூசுஃப் பதான் 12 வருட IPL காலத்தில் 3204 ஓட்டங்களையும் 42 விக்கெட்களையும் எடுத்துள்ளார்.