இந்திய கிரிக்கெட்டில் இணையும் புதிய தலைமை பயிற்சியாளர்…!

இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் புதிய தலைமை பயிற்சியாளராக முன்னாள் இந்திய வீரர் ரமேஷ் பாவார் நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணிக்காக 2 டெஸ்ட் மற்றும் 31 ஒருநாள் போட்டிகளில் விளையாடிய ரமேஷ் பாவார், அண்மையில் நிறைவுக்கு வந்த விஜய் ஹசாரே தொடரில் சாம்பியன் பட்டம் வென்ற மும்பை அணியை பயிற்றுவித்தவராவார்.

தேசிய கிரிக்கெட் அகாடமியின் பந்துவீச்சு பயிற்சியாளராக செயல்பட்ட இவரை, மூவரடங்கிய தேர்வுக்குழு தேர்வு செய்துள்ளது. 35 விண்ணப்பங்களுக்குள் இருந்து மதன் லால், RP சிங்,சுலக்ஷனா நாயக் ஆகியோர் அடங்கியே குழுவே மகளிர் அணி பயிற்சியாளராக ரமேஷ் பாவாரை தேர்வு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.