இந்திய கிரிக்கெட் அணிக்கு 4வது டெஸ்டில் புதுமுக வேகப்பந்துவீச்சாளர் பிரஷீத் கிருஸ்ணா இணைக்கப்பட்டுள்ளார்.
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் 4வது போட்டி நாளை (02) ஓவல் மைதானத்தில் ஆரம்பமாகவுள்ளது.
இரு அணிகளும் தலா ஒவ்வொரு வெற்றிகளைப் பெற்றுள்ள நிலையில் நாளைய போட்டி மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்குரிய போட்டியாக அமையவுள்ளது.
இந்த நிலையில் இந்திய அணி 4-வது டெஸ்ட் காண குழாமில் புதுமுக பந்துவீச்சாளர் ஸ்ரீ கிருஷ்ணா இணைக்கப்பட்டுள்ளதாக இந்திய கிரிக்கெட் சபை அறிவித்துள்ளது.
ஆயினும் விளையாடுகின்ற 11 பேர் கொண்ட அணியில் கிருஷ்ணாவிற்கு வாய்ப்பு வழங்கப்படுமா என்பது உறுதியாக தெரியவில்லை.
நாளைய போட்டிக்கான 15 பேர் கொண்ட அணியில் பிரஷீத் கிருஷ்ணாவும் உள்ளடக்கப்பட்டு உள்ளமை கவனிக்கத்தக்கது.
ஏற்கனவே வலைப் பயிற்சிக்கான பந்துவீச்சாளராக பிரஷீத் கிருஸ்ணா இருந்தமை சுட்டிக்காட்டத்தக்கது.