இந்திய கிரிக்கெட் அணியின் புதிய Retro Kit இல் டோனி, வைரலாகும் புகைப்படங்கள்…!

இந்திய கிரிக்கெட் அணியின் புதிய Retro Kit இல் டோனி, வைரலாகும் புகைப்படங்கள்…!

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவரான மஹேந்திர சிங் தோனி சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்று ஐபிஎல் போட்டிகளில் மட்டும் விளையாடி வருகிறார்.

அவ்வப்போது சமூக வலைத்தளங்கள் மூலமாக மட்டுமே ரசிகர்களுக்கு அவரை காணக்கிடைக்கிறது.

இரு தினங்களுக்கு முன்னர் மும்பையில் இடம்பெற்ற சிநேகபூர்வமான கால்பந்தாட்டப் போட்டி ஒன்றில் ரன்பீர் கபூருடன் விளையாடிய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களை ஆக்கிரமித்திருந்தன.

இந்த நிலையில் நேற்றைய நாளில் தோனியின் இன்னும் சில புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களை ஆக்கிரமித்திருக்கின்றன.

இந்திய அணியின் பிரபலமானதாக கருதப்படுகின்ற Retro Kit என அழைக்கப்படும் புதிய Jersey யுடன் ரசிகர்களால் தோனியை காண முடியவில்லை என்ற குறை பலருக்கும் இருந்்தது.

இப்போது அந்த Retro Kit Jersey அணிந்து சமூக வலைத்தளங்களை ஆக்கிரமித்தார் தல தோனி.

ஒரு விளம்பர படப்பிடிப்புக்காக தோனி இந்த Jersey அணிந்தமை தெரியவந்திருக்கிறது, அது தொடர்பாக அந்த விளம்பர படத்தை இயக்கும் இயக்குனர் தன்னுடைய இன்ஸ்டாகிராம் இல் கருத்து பகிர்ந்துள்ளமை கவனிக்கத்தக்கது.

பாலிவுட்டின் நடன இயக்குனரும் இயக்குநருமான ஃபரா கான் தனது இன்ஸ்டாகிராமில் தனது படத்தை எம்.எஸ்.தோனியுடன் பகிர்ந்து கொண்டார், மேலும் உலகக் கோப்பை வென்ற கேப்டனை ஒரு விளம்பரத்திற்காக இயக்கியதாக அவர் அங்கே வெளிப்படுத்தினார்.

எம்.எஸ். தோனியைப் பாராட்டிய ஃபரா கான், சி.எஸ்.கே கேப்டன் மிகவும் எளிமையானவர் என்றார்.

தோனி ‘வாடிக்கையாளர்கள் முதல் ஸ்பாட் பாய்ஸ் வரை’ அனைவருடனும் படங்களை எடுத்தார். எம்.எஸ்.தோனியின் படத்தை பிரபல புகைப்படக் கலைஞர் தபூ ரத்னானி கிளிக் செய்தார். பிரபல புகைப்படக் கலைஞர் எம்.எஸ்.தோனியுடன் ஃபரா கானின் படம் குறித்து கருத்து தெரிவித்ததோடு எம்.எஸ்.தோனியை பாராட்டியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

எது எவ்வாறாயினும் தோனியை Retro Kit பார்த்ததில் ரசிகர்கள் மகிழ்ச்சியில் இருக்கிறார்கள்.