இந்திய கிரிக்கெட் அணியின் நெடுநாள் உலக சாதனையை சமன் செய்த அவுஸ்ரேலிய மகளிரணி..!
நியூஸிலாந்தில் இடம்பெற்று வருகின்ற மகளிர் உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின் இன்றைய ஆட்டத்தில் ஆஸ்திரேலிய மகளிர் அணி வரலாற்று சாதனை படைத்துள்ளது.
278 இன்னும் மிகப்பெரிய வெற்றி இலக்குடன் ஆடிய அவுஸ்ரேலிய மகளிர் அணி அபார வெற்றியை பதிவு செய்தது இதன் மூலமாக உலக அரங்கில் அதிக வெற்றிகளைப் பெற்றுக் கொண்ட அணியான இந்திய ஆடவர் அணியின் உலக சாதனையை சமன் செய்துள்ளது .
இந்திய ஆடவர் அணி 2005 முதல் 2006 வரையிலான காலப்பகுதியில் தொடர்ச்சியான 17 வெற்றிகளை துரத்தியடித்து வெற்றிகளைப் பெற்றுக் கொண்டது.
மெக் லெனிங் தலைமையிலான அவுஸ்திரேலிய மகளிர் அணி இந்தியாவுக்கு எதிராக இன்று பெற்றுக்கொண்ட வெற்றி சேசிங் இன்போது பெறப்பட்ட 17 வது வெற்றியாக அமைந்துள்ளது .
இதன் மூலமாக இந்த அணி இந்திய ஆடவர் அணி உலக சாதனையை சமன் செய்துள்ளது ,அடுத்து வரவுள்ள ஆட்டத்தின்போது வெற்றிபெறுமாக இருந்தால் சர்வதேச கிரிக்கெட் அரங்கில் சேசிங்கில் தொடர்ச்சியாக வெற்றி கொண்ட உலக சாதனையை படைக்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது.