இந்திய கிரிக்கெட் அணி 12 பேரோடு விளையாடியது- பாகிஸ்தான் முன்னாள் பயிற்சியாளர் ஆதர் தெரிவித்த கருத்து..!

இந்திய கிரிக்கெட் அணி 12 பேரோடு விளையாடியது- பாகிஸ்தான் முன்னாள் பயிற்சியாளர் ஆதர் தெரிவித்த கருத்து..!

ஐக்கிய அரபு அமீரகத்தில் இடம்பெற்று வருகின்ற 15ஆவது ஆசிய கிண்ண போட்டி தொடரில் நேற்று இந்திய, பாகிஸ்தான் அணிகள் பலப்பரீட்சை நடத்தின.

இறுதி வரைக்கும் பரபரப்புக்கும் பஞ்சம் இல்லாத இந்த இரு தரப்பு ஆட்டத்திலே இறுதியில் போராட்டத்திற்கு மத்தியில் இந்தியா 5 விக்கெட்டுகளால் வெற்றி பெற்றது.

 

இந்த போட்டியில் இந்திய அணி மிகச் சிறப்பாக போராட்டத்திற்கு மத்தியில் வெற்றி பெற்றிருந்தாலும்கூட, இந்தப் போட்டிக்குப் பின்னர் கருத்து தெரிவித்த பாகிஸ்தான் அணியின் முன்னாள் தலைமை பயிற்சியாளர் மிக்கி ஆர்தர் ஒரு மிக முக்கியமான கருத்தை தெளிவுபடுத்தியிருக்கிறார்.

இந்திய கிரிக்கெட் அணி இப்போது  12 பேருடன் விளையாடிக்கொண்டிருக்கிறது, கிட்டத்தட்ட இரண்டு ஆட்டக்காரர்களுக்கு சமமான பங்களிப்பை ஹார்டிக் பண்டிநா நல்கி கொண்டிருக்கிறார் என தெரிவித்துள்ளார்.

பந்துவீச்சில் முழுநேர பந்துவீச்சாளர் ஆகவும், அதேபோன்று மிகச்சிறந்த துடுப்பாட்ட வீரராகவும் தன்னை நிலைநிறுத்திக் கொண்டிருக்கும் ஹார்திக் பாண்டியாவை புகழ்ந்துள்ளார்.

நான் தென் ஆப்பிரிக்காவின் தலைமை பயிற்சியாளராக இருந்த காலகட்டங்களில் எங்கள் அணியில் எவ்வாறு ஜாக்ஸ் காலிஸ் பங்களிப்பை நல்கினாரோ, அதே போன்று ஒரு பங்களிப்பை இப்போது இந்தியாவிற்கு ஹார்டிக் பாண்டிநா கொடுத்துக் கொண்டிருக்கிறார் என பாகிஸ்தானின் முன்னாள் தலைமை பயிற்சியாளர் மிக்கி ஆர்தர் தெரிவித்துள்ளார்.

நேற்றைய போட்டியில் ஆட்டமிழக்காது வெற்றியைப் பெற்றிக் கொடுத்து ஆட்டநாயகன் விருதை வென்றமை குறிப்பிடத்தக்கது.