இந்திய கிரிக்கெட் சபைக்கு எதிராக ஆர்ப்பாட்டம்- சாம்சன் ஆதரவாளர்கள் தீர்மானம் ..!

இந்திய கிரிக்கெட் சபைக்கு எதிராக ஆர்ப்பாட்டம்- சாம்சன் ஆதரவாளர்கள் தீர்மானம் ..!

இந்திய மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகளுக்கிடையில் இடம்பெறவுள்ள கிரிக்கெட் தொடரின் போது இந்திய கிரிக்கெட் சபைக்கு எதிராக ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.

சஞ்சு சம்சன் இந்திய அணியில் தேர்வு செய்யப்படாமைக்கு எதிர்ப்பு வெளியிடும் முகமாகவே இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.

வருகின்ற செப்டம்பர் மாதம் 28ஆம் திகதி தென் ஆபிரிக்காவுடனான T20 போட்டியின் போது சாம்சன் ஆதரவாளர்கள் இந்திய கிரிக்கெட் சபையின் தீர்மானத்திற்கு எதிராகவே இந்த ஏற்பாட்டை முன்னெடுக்க தீர்மானித்துள்ளதாக  அறிய வருகிறது.

இந்தியாவின் உலகக்கிண்ண அணியில் சஞ்சு சம்சன் இணைத்துக் கொள்ளப் படாத நிலையில் ஏராளமான வாதப்பிரதிவாதங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

எமது YouTube தளம் ?