இந்திய கிரிக்கெட் ரசிகர்களால் கொண்டாடப்படும் பஹார் சமான், நேர்மைக்கு கிடைத்த கௌரவம் (வீடியோ இணைப்பு)

ஐக்கிய அரபு அமீரகத்தில் இடம்பெற்று வருகின்ற 15ஆவது ஆசிய கிண்ண போட்டி தொடரில் நேற்று இந்திய, பாகிஸ்தான் அணிகள் பலப்பரீட்சை நடத்தின.

இறுதி வரைக்கும் பரபரப்புக்கும் பஞ்சம் இல்லாத இந்த இரு தரப்பு ஆட்டத்திலே இறுதியில் போராட்டத்திற்கு மத்தியில் இந்தியா 5 விக்கெட்டுகளால் வெற்றி பெற்றது.

இந்தப் போட்டியில் இந்திய அணியின் வெற்றியை பெற்று இருந்தாலும்கூட, விளையாட்டு ரசிகர்களின் இதயத்தை வென்றவராக பாகிஸ்தான் அணியின் துடுப்பாட்ட வீரர் பஹார் சமான் போற்றப்படுகிறார்.

விளையாட்டு உணர்வை மதிக்கத்தக்க மிகச்சிறந்த ஸ்போட்ஸ்மன்ஷிப் தன்மையை வெளிப்படுத்தியதற்காக கொண்டாடப்படுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது .

பவர் பிளே இடம்பெற்றுக் கொண்டிருந்தபோது ஆறாவது ஓவரை வீசினார் அவேஸ் கான், அந்த ஓவரில்  விக்கெட் காப்பாளர் தினேஷ் கார்த்திக்கிடம் பிடி கொடுத்து ஆட்டமிழந்தார் பஹார் சமான், ஆனாலும் இந்திய வீரர்கள் எவரும் அது தொடர்பில் நடுவரிடம் முறையீடு செய்யவில்லை. நடுவரும் அதனை ஆட்டமிழப்பாக அறிவிக்கவில்லை, ஆயினும் பந்து துடுப்பில் பட்டு தினேஷ் கார்திக் கைகளுக்கு சென்றதை உணர்ந்த பஹார் சமான் நடுவிலேயே மைதானத்தை விட்டு வெளியேறியிருந்தமை எல்லோருக்கும் ஆச்சரியத்தைத் தந்தது .

கிரிக்கெட் உணர்வோடு மிகச்சிறந்த ஸ்போட்ஸ்மன்ஷிப் வெளிப்படுத்துவதற்காக போற்றப்படுகிறார் சமான், கிரிக்கெட் இன்றும் ஆரோக்கியத்தோடு வாழ்கிறது என்று சொன்னால் பாகிஸ்தான் அணியின் பஹார் சமான் போன்ற நேர்மையான கிரிக்கெட் வீரர்கள் இதற்கு சான்று எனலாம்.