இந்திய சுழலில் ஆட்டம் கண்டது இங்கிலாந்து…!

இந்திய சுழலில் ஆட்டம் கண்டது இங்கிலாந்து…!

இந்திய மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் போட்டி தொடரின் 3 வது போட்டி அஹமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் தற்சமயம் இடம்பெற்று வருகின்றது.

போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணித்தலைவர் ஜோ ரூட் முதலில் துடுப்பாடும் விருப்பை வெளியிடார்.

அதன்படி முதலில் ஆடிய இங்கிலாந்து, இந்தியர்களின் சுழல் பந்தை எதிர்கொள்ள முடியாது 112 ஓட்டங்களில் சுருண்டு போனது.
பகலிரவு டெஸ்ட்டான இந்த போட்டியில் இந்தியா 3 சுழல் பந்து வீச்சாளர்களுடன் களமிறங்கியது.

தன்னுடைய 2 வது டெஸ்ட்டில் ஆடும் அக்சர் பட்டேல் 6 விக்கெட்களையும், அஷ்வின் 3 விக்கெட்களையும் கைப்பற்ற, 100 வது டெஸ்ட்டில் விளையாடும் இஷாந்த் சர்மா 1 விக்கெட்டையும் கைப்பற்றினர்.

இங்கிலாந்து 112 ஓட்டங்களுடன் தங்கள் முதல் இன்னிங்க்ஸை முடித்துக் கொண்டது.