இந்திய டெஸ்ட் அணிக்கு புதிய உதவித் தலைவர்- இளம் வீரரைத் தேடிப் போகும் அரிய வாய்ப்பு …!

இந்திய டெஸ்ட் அணிக்கு புதிய உதவித் தலைவர்- இளம் வீரரைத் தேடிப் போகும் அரிய வாய்ப்பு …!

இந்திய அணி தென்ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது.

இந்திய அணித்தலைவராக விராட் கோலியும் ,உதவித் தலைவராக ரோஹித் சர்மாவும் செயற்படுவார்கள் என முன்னர் அறிவிக்கப்பட்டது, ஆனால் பயிற்சியின்போது உதவி தலைவரான ரோஹித் சர்மாவிற்கு உபாதை ஏற்பட்டது, அதன் காரணத்தால் இந்திய கிரிக்கெட் அணிக்கு தென்னாப்பிரிக்க தொடரை இலக்கு வைத்து புதிய உதவித் தலைவர் நியமனம் வழங்கப்படவுள்ளது.

அதன் அடிப்படையில் இந்திய கிரிக்கெட் அணியின் டெஸ்ட் போட்டிகளுக்கான உதவித் தலைவராக லோகேஸ் ராகுல் செயற்படுவார் என செய்திகள் வெளியாகியுள்ளன.

லோகேஷ் ராகுல், ரிஷாப் பாண்ட் ,ரவிசந்திரன் அஸ்வின் ஆகியோருக்கிடையில் கடுமையான போட்டி நிலவினாலும் ,லோகேஷ் ராகுலுக்கு உதவி தலைவர் பதவி செல்ல உள்ளதாக இந்திய ஊடகங்கள் குறிப்பிடுகின்றன .

இந்திய மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கிடையிலான டெஸ்ட் தொடர் டிசம்பர் 26ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது.