இந்திய தேர்வாளர்களுக்கு சங்கடத்தை தோற்றுவித்திருக்கும் மும்பை இந்தியன்ஸின் கிஷன் மற்றும் சூரியகுமார் யாதவ்- மாற்றம் வரலாம்..?
14வது ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகளுக்கிடையிலான போட்டி நிறைவுக்கு வந்துள்ளது.
இந்த போட்டியில் விராட் கோலி தலைமையிலான பெங்களூர் அணி அபாரமான வெற்றியை பதிவு செய்தது.
முதலில் துடுப்பெடுத்தாடிய RCB அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 6 விக்கெட்டுக்கு 165 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது ,கோலி , மக்ஸ்வெல் துடுப்பாட்டத்தில் மிகச்சிறப்பாக ஓட்டங்கள் குவித்தனர் .
பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய மும்பை இந்தியன்ஸ் அணிக்கு ரோகித் சர்மாவும் குயின்டன் டி காக் கும் நல்ல ஆரம்பத்தை கொடுத்தாலும், அவர்களுடைய மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் அனைவருமே சொதப்பினர்.
குறிப்பாக இந்தியா உலக கிண்ண அணிக்கு தெரிவு செய்யப்பட்டிருக்கும் இஷன் கிஷன் (9,14,11 ஓட்டங்கள்) மற்றும் சூரியகுமார் ஜாதவ் (8,5,3 ஓட்டங்கள் ) ஆகிய இருவரும் இந்த தொடர் முழுவதுமாகவே சொதப்பி வருகின்றமை இந்திய தேர்வாளர்களுக்கு தலையிடியை கொடுத்திருக்கிறது.
இது மாத்திரமல்லாமல் ராகுல் சஹார், மற்றும் ஹார்திக் பாண்டியா ஆகியோரது பங்களிப்புகளும் இந்த தொடர் முழுவதும் விமர்சனத்தை தோற்றுவித்துள்ளன.
ஆகவே இந்திய அணிக்கு வெளியில் இருக்கும் ஷிரேயாஸ் ஐயர் ,சஹால் ஆகிய வீரர்களை அணியில் சேர்க்க வேண்டும் என்றும் கருத்துக்கள் வலுப்பெற்றிருக்கின்றன.
இந்திய தேர்வாளர்களை மிகப்பெரிய நெருக்கடிக்குள் தள்ளியிருக்கும் இந்த விடயம் தொடர்பில், மாற்றம் வரலாம் என நம்பப்படுகிறது.
ஆறு மாதங்களாக போட்டிகளில் விளையாடாமல் உபாதைக்கு உள்ளாகியிருந்த ஷிரேயாஸ் அய்யர் இரண்டு போட்டிகளிலும் மிக அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருக்கிறார்.
அது மாத்திரமல்லாமல் சஹால் இன்று 11 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுகளை கைப்பற்றி இருந்தமையும் குறிப்பிடத்தக்கது. இந்த போட்டியில் ஆர்சிபி அணி போராடி 54 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.