இந்திய தேர்வாளர்களை சீண்டிப் பார்த்த ஹர்பஜன் சிங் -ஒற்றை டுவீட் ஏற்படுத்திய சர்ச்சை..!

14வது ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகளுக்கிடையிலான போட்டி நிறைவுக்கு வந்துள்ளது.

இந்த போட்டியில் விராட் கோலி தலைமையிலான பெங்களூர் அணி அபாரமான வெற்றியை பதிவு செய்தது.

முதலில் துடுப்பெடுத்தாடிய RCB அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 6 விக்கெட்டுக்கு 165 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது ,கோலி , மக்ஸ்வெல் துடுப்பாட்டத்தில் மிகச்சிறப்பாக ஓட்டங்கள் குவித்தனர் .

 

இன்றைய போட்டியில் 54 ஓட்டங்கள் வித்தியாசத்தில் RCB யின் வெற்றிக்கு சஹால் சிறந்த பங்களிப்பை நல்கினார்.

சஹால் மிகச் சிறப்பான முறையில் 4 ஓவர்கள் பந்து வீசி பதினொரு ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

இந்தியாவின் முதல் தர ட்வென்டி ட்வென்டி பந்துவீச்சாளராக இருந்தாலும்கூட, அவரை T20 போட்டிகளுக்கான உலகக்கிண்ண அணியில் இந்திய தேர்வர்கள் தேர்வு செய்யவில்லை.

கொஞ்சம் வேகமாக வீசக்கூடிய சுழற்பந்து வீச்சாளரை தேர்வு செய்திருக்கிறோம் என்று மும்பை இந்தியன்ஸ் ராகுல் சஹாரை அவர்கள்  அணியில் பெயரிட்டிருந்தனர்.

இந்த நிலையில் சஹாலின் பந்து வீச்சை பாராட்டியிருக்கும் ஹர்பஜன் ஸ்லோ அல்லது ஸ்பீட் ஆக பந்து வீசிினாரா என்று கேள்வியை எழுப்பி இந்திய தேர்வாளர்களை கொஞ்சம் சீண்டிப் பார்த்தார்.

எது எவ்வாறாயினும் இந்த சுஇறப்பு பந்துவீச்சு மூலமாக சஹால் மீண்டும் அணிக்குள் வரவேண்டும் எனும் கோரிக்கைகளும் வலுப்பெற்றிருக்கின்றன.