இந்திய தொடரில் பங்கேற்ற இலங்கை சகலதுறை வீரர் திடீர் ஓய்வு முடிவு …!

இந்திய தொடரில் பங்கேற்ற இலங்கை சகலதுறை வீரர் திடீர் ஓய்வு முடிவு …!

இந்திய மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான மட்டுப்படுத்தப்பட்ட போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்ற இலங்கையின் சகலதுறை ஆட்டக்காரரான இசுரு உதான சர்வதேச கிரிக்கெட்டுக்கு கொடுப்பதாக அறிவித்துள்ளார்.

ஸ்ரீலங்கா நாட்டின் பிரதம நிறைவேற்று அதிகாரி ஆஷ்லி டி சில்வா இந்த தகவல்களை வெளியிட்டுள்ளார் .

33 வயதான இசுரு உதான 2009ஆம் ஆண்டு டி20 போட்டிகளில் அறிமுகமானதுடன் 2012ஆம் ஆண்டு ஒருநாள் போட்டியிலும் இலங்கைக்காக அறிமுகத்தை மேற்கொண்டார்.

12 ஆண்டுகளாக இலங்கை கிரிக்கெட்டில் விளையாடி வரும் இசுரு உதான ,35 டுவென்டி டுவென்டி போட்டிகளிலும் ,இருபத்தொரு ஒருநாள் போட்டிகளிலும் இலங்கை அணியைப் பிரதிநிதித்துவம் செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Isuru udana IPL

விராட் கோலி தலைமையிலான பெங்களூர் அணியில் கடந்த ஆண்டு இடம்பெற்ற ஐபிஎல் போட்டிகளில் 10 ஆட்டங்களில் விளையாடி இலங்கையர்களை பெருமைப்படுத்தியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது .ஆனாலும் அண்மைக்காலமாக உபாதைகளால் அவதிப்பட்டு வரும் உதான,  இளம் வீரர்களுக்கு தேர்வாளர்கள் தொடர்ச்சியான வாய்ப்புகளுக்கு முயற்சிப்பதும் இசுரு உதான ஓய்வுக்கு காரணமாக இருக்கலாம் என்று பேசப்படுகிறது.

எது எவ்வாறாயினும் இலங்கையின் மிகச் சிறந்த சகலதுறை ஆட்டக்கார்ராக மிளிர்ந்த உதானவை வாழ்த்துக்களோடு வழியனுப்பி வைப்போம்.

Isuru udana

Previous articleஇலங்கையர் பதக்க கனவை நனவாக்குவாரா யூபுன்- இன்று மாலை போட்டி
Next articleவலிமிகு சோதனைகளுக்குப் பின் மகிழ்ச்சி தரும் ஒலிம்பிக் மகுடம் …!