இலங்கை அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் லசித் மலிங்க, இலங்கை தேசிய அணியின் பந்துவீச்சு ஆலோசகராக தனது குறுங்காலப் பணியை முடித்துக்கொண்டார்.
தற்போது ஆஸ்திரேலியாவில் வசிக்கும் மலிங்க, ஐந்து போட்டிகள் கொண்ட இலங்கையின் அவுஸ்ரேலிய தொடருக்கான அணியில் பந்துவீச்சு ஆலோசகராக இணைந்தார்.
“தொடரை வெற்றியுடன் முடித்ததில் மகிழ்ச்சி. நன்றாக விளையாடினார்கள் இலங்கை வீர்ர்கள். கடந்த 3 வாரங்களாக SL இன் இளம் வேகப்பந்து வீச்சாளர்களுடன் பணிபுரிவதை நான் மிகவும் ரசித்தேன். இயற்கையான திறமைகளும், திறன்களும் உள்ளன. வரவிருக்கும் இந்திய சுற்றுப்பயணத்திற்கு அணிக்கு நல்வாழ்த்துக்கள். என்று மலிங்கா ட்வீட் செய்துள்ளார்.
வியாழன்(24) அன்று தொடங்கும் டி20 தொடருக்காக இலங்கை அணி இப்போது இந்தியா செல்கிறது.
SLC யின் பிரதம நிறைவேற்று அதிகாரி ஆஷ்லி டி சில்வா, மலிங்கா அணியுடன் இந்தியாவுக்குப் பயணம் செய்ய மாட்டார் என்று உறுதிப்படுத்தினார்.
இதன்மூலம் மலிங்கவின் பயிற்சியாளர் பணி முடிவுக்கு வந்துள்ளமை உறுதியாகின்றது.
முதல் நான்கு போட்டிகளிலும் தோல்வியை தழுவிய இலங்கை அணி ,5வது இறுதியைமான இன்றைய போட்டியில் குசல் மெண்டிஸ் இன் அதிரடி ஆட்டத்தின் மூலமாக இறுதி ஓவரில் அபார வெற்றியை பெற்றமை குறிப்பிடத்தக்கது .
இலங்கை, அவுஸ்ரேலிய அணிகளுக்கிடையிலான தொடர் 4-1 என அவுஸ்ரேலியா வசமானமை குறிப்பிடத்தக்கது.